• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

உ.பி.யில் விடாமல் தொடரும் வன்முறை.. கரும்பு தோட்டத்தில் சிறுமி பலாத்காரம்.. கொடூர கொலை!

|

லக்னோ: 3 வயது பெண் குழந்தையை கரும்பு தோட்டத்தில் வைத்து படுபாவிகள் நாசம் செய்துள்ளனர்.. அந்த குழந்தையை கொலையும் செய்துள்ளனர்.. குழந்தையின் உடம்பெல்லாம் குதறி குதறி கிடந்த காயங்களை கண்டு பொதுமக்கள் அலறிவிட்டனர்.. உபியில், லக்மிபூர் என்ற மாவட்டத்தில் இந்த 3 வாரத்தில் மட்டும் நிகழும் 3வது பயங்கர சம்பவம் இதுவாகும்.

லக்மிபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு பக்கத்தில் சிங்காகி என்ற இடம் உள்ளது.. இந்த பகுதியில் பெரும்பாலும் கரும்பு தான் பயிரிடப்பட்டுள்ளது.. இங்குதான் அந்த குழந்தையின் சடலம் கிடந்தது.. கடந்த புதன் கிழமை விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளாள்.. அதனால் பதறி போன பெற்றோர் பல இடங்களில் தேடி இறுதியில் போலீசில் போய் புகார் தந்தனர்.

 UP: Lakhimpur 3 year old raped before murder third such case in this 3 weeks

அதனடிப்படையில் குழந்தையை தேடி வந்த நிலையில்தான், சடலம் கண்டெடுக்கப்பட்டது.. பிறகு சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர்.. அந்த போஸ்ட் மார்ட்டத்தில், குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.. உடம்பெல்லாம் காயங்கள் இருக்கிறதாம்.

இதை பற்றி போலீஸ் உயரதிகாரி சத்யேந்திர குமார் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லும்போது, "போஸ்ட் மார்ட்டத்தில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளது.. நான் இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தான் இருக்கிறேன்.. இந்த கொடுமையை செய்தது யார் என தெரியவில்லை.. அதனால் 7 பேர் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகிறோம்.. நானே நேரடியாக தேடல் பணியில் ஈடுபட்டுள்ளேன்.. தவறு செய்பவர்கள் இனி தப்பிக்க முடியாது.. கடுமையான தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.. தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமும் குற்றவாளி மீது பாயும்" என்று கொந்தளித்து சொன்னார்.

இது சம்பந்தமாக விசாரணையும் நடந்து வருகிறது.. உயிரிழந்த சிறுமியின் அப்பா தன்னுடைய புகாரில், குடும்ப முன் பகை காரணமாக, லேக்ராம் என்பவர்தான் தன் குழந்தையை கடத்தி இந்த கதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.. அதனால், விசாரணை தீவிரமாகி உள்ளது.

லடாக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது.. படைகளை குவித்து உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பரபரப்பு!லடாக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது.. படைகளை குவித்து உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பரபரப்பு!

இப்படித்தான், கேரி மாவட்டத்தின் லக்மிபூரில் சமீபத்தில் 17 வயது தலித் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்,.. அந்த பெண்ணையும் பலாத்காரம் செய்து கொன்றே விட்டனர்.. இறுதியில் சடலத்தை ஒரு குளத்துக்கு பக்கத்தில் வீசிவிட்டு சென்றனர் கயவர்கள்.. அதேபோல, 13 வயது சிறுமியையும் இப்படி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, இதே போன்று கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். ஆக, இதே மாவட்டத்தில், பலாத்காரம் செய்யப்பட்டு கொலைகள் நடப்பது இது 3வது முறையாகும்.

இந்த உத்தரபிரதேசத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. சமீப காலமாகவே அங்கு வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அளவுக்கு அதிகமாக நடந்து வருகிறது... இதை எதிர்க்கட்சிகளும் விடாமல் கேள்வி எழுப்பி யோகி அரசை விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றன.

ஆகஸ்ட் 5-ம் தேதி, புலந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில் 8 வயசு சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது.. ஆனால் அந்த குழந்தை கத்தி கூச்சலிடவும், அவள் குரல்வளையை நெரித்தே கொன்று விட்டனர்.. அந்த சிறுமியின் உடலும் கரும்பு தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இப்போது 3 வயது குழந்தையின் சடலம் கரும்பு தோட்டத்தில் விழுந்து கிடப்பதை பார்த்ததும், யோகி ஆதித்யநாத் அரசின் மீது அங்கு கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

English summary
UP: Lakhimpur 3 year old raped before murder third such case in this 3 weeks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X