லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 5 ரூபாயில்... 500 பேரின் கைரேகைகளை திருடி... லட்ச கணக்கில் கொள்ளையடித்த கும்பல் கைது

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வெறும் ஐந்து ரூபாய் செலவில் கைரேகைகளை திருடி, சுமார் 500 வங்கிக் கணக்குகள் ஹேக் செய்த பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தின் ஜலாலாபாத் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பலரும் அரசு திட்டங்களில் மூலம் வரும் உதவித் தொகைகள் முறையாக தங்களுக்கு வந்து சேருவதில்லை என்று தொடர்ந்து புகார் அளித்தனர். அதையடுத்து காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பலருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் இந்த வழக்கு க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், அரசின் உதவி தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்கிறது என்றும் அதன் பின் வங்கிகளிலிருந்து அந்த பணம் எடுக்கப்படுவதும் தெரியவந்தது.

பலர் கைது

பலர் கைது

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பயனாளர்களின் கைரேகையை திருடி, வங்கி ஊழியர்களின் உதவியுடன் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை ஒரு கும்பல் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவ்ராம், சுனில் திரிபாதி, தேவ் வ்ராட், சந்தீப் சிங் என நான்கு வங்கி ஊழியர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குளோன் செய்யப்பட்ட கைரேகைகளும் போலி முத்திரைகளும் கைப்பற்றப்பட்டது.

ஐந்து ரூபாயில் கைரேகை திருட்டு

ஐந்து ரூபாயில் கைரேகை திருட்டு

வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் கவுரவ் என்ற நபரை உபி காவல் துறை கைது செய்தது. 26 வயதாகும் கவுரவ், அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இணையதளத்தில் மூலம் கைரேகையை திருடுவதைக் கற்றுக்கொண்ட அவர், வெறும் ஐந்து ரூபாய் செலவில் பசையைப் பயன்படுத்தி, தனது கடைக்கு வரும் பொதுமக்களின் கைரேகைகளைத் திருடி உள்ளார்.

பல கும்பல்களுடன் தொடர்பு

பல கும்பல்களுடன் தொடர்பு

அப்படித் திருடப்படும் கைரேகைகளை வங்கிகளில் பணிபுரியும் தனது நண்பர்களுக்குக் கொடுத்து, அதன் மூலம் 500க்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து லட்சக் கணக்கான பணத்தைத் திருடி உள்ளனர். கவுரவ் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட கைரேகைகளையும் போலீசார் கைப்பற்றினர். இந்த நபருக்கு மேலும் பல கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தகவல்

போலீசார் தகவல்

இது குறித்துக் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர்கள் திருடப்பட்ட கைரேகையைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள். இதனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கைரேகைகளைத் திருடும் முறைகள் இணையத்தில் கொட்டிக்கிடகிறது. இதே முறையைப் பயன்படுத்தி, பணத்தைத் திருடும் மற்ற கும்பங்கள் குறித்த விசாரணையை இப்போது தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றார்.

English summary
UP Man clones fingerprints with glue gun hack 500 bank accounts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X