லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு கொடுத்த வரதட்சணையில் இருசக்கர வாகனம் இல்லாததால் திருமணம் நடந்த 24 மணி நேரத்தில் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவன் பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாத்தைச் சேர்ந்தவர் சஹாகே அலாம். இவருக்கும் ருக்சனா பனோ என்பவருக்கும் கடந்த ஜுலை 13 ம்தேதி திருமணம் இனிதே நடந்தது.

மணப்பெண் ருக்சனா பனோவின் குடும்பத்தினர், மணமகன் சஹாகே அலாமுக்கு வரதட்சணை பொருட்களை திருமணம் நடந்த பின்னர் கொடுத்துள்ளனர். ஆனால் வரதட்சணையில் சொன்னபடி இருசக்கர வாகனத்தை கொடுக்கவில்லையாம்.

24 மணிநேரத்தில்

24 மணிநேரத்தில்

இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் சஹாகே அலாம், திருமணம் நடந்த 24 மணி நேரத்தில் தனது மனைவி ருக்சனாவிடம் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு பிரிந்து சென்றார்.

வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமை

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை, தனது மருமகன் அலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர் மீது பேடாக்பூர் போலீஸ் ஸ்டேசனில் வரதட்சணை புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அலாம் உள்ளிட்ட 12 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்தனர்.

நடவடிக்கை உறுதி

நடவடிக்கை உறுதி

இந்த புகாரை பற்றி சுப்பிரண்டு போலீஸ் ஆகாஷ் தோமர் கூறுகையில், வழக்கு பதிவு செய்து விசாரைணை விரைந்து முடித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முத்தலாக் பிரச்சனை

முத்தலாக் பிரச்சனை

மாமனார் வீட்டில் பைக் வாங்கி கொடுக்காததற்காக மனைவியை திருமணம் செய்த 24 மணி நேரத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்தலாக் சொல்லி பிரிந்து சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
UP Man Shahe Alam Gives Triple Talaq his wife Within day of Marriage After Wife's Family not give him a motorbike in dowry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X