லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    UP man to stay dressed as bride for 30 years | எல்லாம் கனவு படுத்தும் பாடு..

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி ஒருவர் மணப்பெண் போன்று 30 ஆண்டுகளாக ஆடை அணிந்து வருகிறார். இவரது கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் ஜலால்பூரில் உள்ள ஹவுஸ்காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்தாஹரன் சவுகான் (66). இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் 14 வயதாக இருந்த போதே இவருக்கு திருமணம் ஆனது.

    ஆனால் திருமணம் ஆன சில மாதங்களில் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் உள்ள தினாஸ்பூரில் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது மளிகை கடைக்காரர் ஒருவர் பழக்கமானார்.

    சொந்த ஊர்

    சொந்த ஊர்

    அவர் தனது மகளை சவுகானுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த திருமணத்தை சவுகானின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த பெண்ணை மேற்கு வங்கத்திலேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.

    தினாஜ்பூர்

    தினாஜ்பூர்

    கணவர் தன்னை விட்டு சென்றுவிட்டார் என்ற கவலையில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண் இறந்த செய்தி அறிந்த சவுகான் மீண்டும் தினாஜ்பூருக்கே வந்துவிட்டார்.

    மரணம்

    மரணம்

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு பிறகு, 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் வற்புறுத்தவே அவர் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

    சவுகான் குடும்பத்தினர்

    சவுகான் குடும்பத்தினர்

    சவுகானின் தந்தை ராம் ஜியாவன், மூத்த சகோதரர் சோடாவு, அவரது மனைவி இந்திராவதி, இவர்களது இரு மகன்கள், இளைய சகோதரர் பாதாவ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். பின்னர் சவுகானின் சகோதரரின் 3 மகள்களும் 4 மகன்களும் இறந்துவிட்டனர்.

    கனவில் 2-ஆவது மனைவி

    கனவில் 2-ஆவது மனைவி

    இந்த நிலையில் சவுகானுக்கு அவரது கனவில் இறந்து போன இரண்டாவது மனைவி, அதாவது மேற்கு வங்கத்து பெண் வந்து வந்து சென்று கொண்டிருந்தார். இதனிடையே அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அப்போது சவுகானிடம் அவரது 2-ஆவது மனைவி கனவில் வந்து சவுகான் எப்போதும் மணப்பெண் வேடத்தில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    சவுகான்

    சவுகான்

    அன்றிலிருந்து இன்று வரை சவுகான் மணப்பெண் வேடத்தில் இருந்து வருகிறார். நாளடைவில் சவுகானின் உடல்நிலையும் சீரானது. ஆரம்பத்தில் சவுகானை எல்லாரும் கிண்டல் செய்தனர். ஆனால் 14 உயிர்களை பறிக் கொடுத்ததால் அதை பற்றி சவுகான் கவலைப்படாமல் மணப்பெண் போல் வேடமிட்டார். அன்றிலிருந்து அவரது குடும்பத்தில் அடுத்தடுத்த இறப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

    English summary
    A man in Uttar Pradesh to stay dresses as bride for 30 years after his wife died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X