லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரொம்ப பசி சார், திருடிட்டான்.. இனி செய்யமாட்டான்.. கண்ணூர் எஸ்பிக்கு.. உபியிலிருந்து போன் போட்ட தாய்

600 ரூபாய் திருடி உள்ளார் புலம் பெயர் தொழிலாளி என்பதால் சிறையில் அடைக்கப்பட்டார்

Google Oneindia Tamil News

லக்னோ: "அவனுக்கு ரொம்ப பசி சார்.. லாக்டவுனில் சிக்கிட்டான்.. வேற வழி தெரியாம திருடிட்டான்.. கையில வேற காசு இல்லை, பாஷையும் தெரியல.. இனிமேல் அவன் திருடவே மாட்டான்" என்று உத்திரபிரதேச தாய் ஒருவர் கண்ணூர் ஜெயில் எஸ்.பிக்கு போன் போட்டு, உறுதி தெரிவித்த சம்பவம் நெகிழ்வை தந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் அருகே டோல்மா என்ற கிராமம் உள்ளது.. இங்குள்ள இளைஞர் பெயர் அஜய் பாபு.. இவர் குடும்பத்தில் வறுமை அதிகம்.. அதனால் ஹைதராபாத்தில் கட்டுமானப்பணிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

up migrant who stole rs 600 for food reaches home with kerala jail sp help

அதனால் 4 மாசத்துக்கு முன்பு ஹைதராபாத்தில் கட்டுமானப்பணிக்கு பாபு தனியாக சென்று கொண்டிருந்தார்.. ஆனால் இளைஞர் வழி தவறி கேரள மாநிலம் காசர்கோட்டுக்கு வந்து சிக்கி கொண்டார். இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டது... எங்குமே செல்ல முடியவில்லை.. வழி தெரியாமல், பாஷை தெரியாமல் விழித்துள்ளார்.. கையில் இருந்த கொஞ்சம் காசும் செலவாகிவிட்டது.. பசி வாட்டி வதைத்தது.. ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் குறைவு, கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டதால், பிச்சை எடுக்கும் காசு போதவில்லை.. அதனால் எதையும் வயிறார சாப்பிடவும் முடியவில்லை.. கொஞ்சமாக சாப்பிடலாம் என்றாலும் கடைகள் இல்லை.. பசியின் கொடுமை சிறுவனை திருட தூண்டியது... அதனால் அங்கிருந்த வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்து பணத்தை திருடிவிட்டார்.. மொத்தம் 600 ரூபாய் எடுத்திருக்கிறார்.

ஆனால் பாபு பணத்தை திருடுவதை போலீசார் பார்த்துவிட்டனர்.. அதனால் பிடித்து கொண்டு போய் கண்ணூர் ஜெயிலில் அடைத்தனர்.. பயந்துபோன பாபு, ஜெயிலில் இருந்து தப்ப முயற்சித்தும், திரும்பவும் பிடித்து கொண்டு வந்து ஜெயிலிலேயே போலீசார் அடைத்தனர்.

ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு

பாபு பற்றி யாருக்குமே வெளியே தெரிய வரவில்லை.. அதனால் ஜாமீனில் யாருமே விடுவிக்கவும் வரவில்லை. இந்த விஷயம் கண்ணூர் ஜெயில் எஸ்பி ஜனார்த்தனுக்கு தெரியவந்தது.. எத்தனை நாள் இப்படி இளைஞரை ஜெயிலில் வைத்திருப்பது என்று யோசித்தார். பாபுவை அழைத்து விசாரித்தார்... அப்போதுதான் என் ஊர் கேரளா இல்லை, உத்திரபிரதேசம் என்றும் தன் அம்மா அங்கேதான் இருக்கிறார் என்று சொன்னார்.

அதனால் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்து எஸ்பியே சொந்த ஜாமீனில் பாபுவை விடுவித்தனர்.. உபி-க்கு ரயில் டிக்கெட்டையும் எடுத்து தந்தனர்.. அழுக்குடன் ஒரே டிரஸ்ஸில் இருந்ததால், வேறு புது டிரஸ் வாங்கி தந்தனர்.. எப்படியும் சொந்த மாநிலம் செல்ல 2 நாள் ஆகும் என்பதால், வழியில் சாப்பிடுவதற்கு சாப்பாடு தந்தனர்.. கை செலவுக்கு பணமும் தந்து ரயில் ஏற்றிவிட்டனர்.

அதன்பிறகு பாபு சொந்த ஊருக்கு பத்திரமாக போய் சேர்ந்தார்.. நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னான்... இதையெல்லாம் கேட்டு அதிர்ந்தாலும், போலீசாரின் உதவியை நினைத்து நெகிழ்ந்துபோனார் அந்த தாய்.. உடனடியாக கண்ணூர் ஜெயில் எஸ்பி ஜனார்த்தனத்துக்கு போன் செய்து பேசினார்.

"ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை மறக்கவே மாட்டேன்.. மகனை தொலைச்சிட்டு, இந்த 4 மாசமாக படாத பாடு பட்டேன்.. சாப்பாடு, தூக்கம் இல்லாமல் தவித்து போய்ட்டேன்.. என் மகன் திருடறவன் இல்லை சார்.. நல்ல பையன்.. பசியால் திருடிட்டான்.. இனிமேல் எந்த சமயத்திலும் இப்படி திருட மாட்டான்" என்று உறுதி சொன்னார்.. இதை கேட்டதும் ஜனார்த்தனன் உட்பட கண்ணூர் போலீசார் நெஞ்சம் மகிழ்ந்தனர்.

English summary
up migrant who stole rs 600 for food reaches home with kerala jail sp help
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X