லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. தான் இந்தியாவுக்கு ரோல் மாடல்... பாஜக ஆட்சியில் ஒரு கலவரமும் நடக்கல... யோகி பெருமிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    உ.பி.தான் இந்தியாவின் ரோல் மாடல் - யோகி ஆதித்யநாத்

    லக்னோ: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடந்தது இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 321 இடங்களை பிடித்து அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. ஆன்மீகவாதியான யோகி ஆதித்யாநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

     UP not seen a single riot after the BJP came to power, says Adityanath

    இந்நிலையில முதல்வர் யோகி ஆதித்யா நாத் இன்று பேசுகையில், "நாங்கள்(பாஜக) ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு சிறிய கலவரம் கூட இங்கு நடந்ததில்லை. குற்றங்களையும், குற்றவாளிகளையும் எங்கள் அரசு கொஞ்சம் கூட சகித்துக் கொண்டதில்லை. இதனால் இங்கு குற்றங்கள் குறைந்துவிட்டது" என்றார்.

     நீங்கதான் காவலரா? ஒரே ஒரு வீடியோ.. மோடியிடம் கேள்வி கேட்கும் இளைஞர்.. செம வைரல்! நீங்கதான் காவலரா? ஒரே ஒரு வீடியோ.. மோடியிடம் கேள்வி கேட்கும் இளைஞர்.. செம வைரல்!

    பாஜக அரசின் இரண்டு ஆண்டுகால ரிப்போர்ட்டை வெளியிட்ட யோகி ஆதித்யா நாத் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தை பற்றிய தவறான கருத்து மாறி இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் தான் பாதுகாப்பான மாநிலங்களுக்கான ரோல் மாடல் என்றும் முதல்வர் யோகி புகழ்ந்தார். உத்தரப்பிரதேச சதப்னா திஸ்வாஸ் விழாவை ( உபி உதய தினம்) 68 வருடங்களில் முதல்முறையாக 2018ம் ஆண்டு பாஜக அரசு கொண்டாடியதாகவும் யோகி ஆதித்யாநாத் பெருமையாக பேசினார்.

    English summary
    Uttar Pradesh Chief Minister Yogi Adityanath says No riots in UP since BJP came to power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X