லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி. ரமாலான் தொழுகை- மசூதிகளில் லவுட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த போலீஸ் தடை

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரமலான் நோன்பு காலத்தில் தொழுகை தொடங்கும் மற்றும் முடிக்கும் நேரம் தொடர்பான அறிவித்தல்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாநில போலீசார் கடும் தடைவிதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் மசூதிகளில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர். தொழுகைக்கான அறிவிப்புகளை விடுப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

UP Police ban loudspeakers in mosques

உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்திலும் இதேபோல் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாம். நாடு முழுவதும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் நிலையில் போலீசார் இந்த கெடுபிடி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுன் : மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்லாக்டவுன் : மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவைத் தருமாறு போலீசாரிடம் கேட்டதால் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது உத்தரவை மதிக்காமல் போனால் கடும் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள நேரிடும் எனவும் போலீசார் எச்சரித்தனர் என்றார்.

இது தொடர்பாக தருல் உலூம் பிராங்கி மஹால் செய்தித் தொடர்பாளர் சூபியான் நிஜாமி கூறுகையில், காசிப்பூர் இமாம்களிடம் இருந்து இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தன. ரமலான் நோன்பு காலத்தில் தொழுகை நேர அறிவிப்பு என்பது மிக முக்கியமானது. அன்றாட தொழுகையை தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். ஆனால் இதை காசிப்பூர் போலீசார் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

பரூக்காபாத் நகர மாஜிஸ்திரேட் அசோக் மவுரியாவும் இது போல வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஆனால் இது பற்றி ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார்.

English summary
Mosques in Ghazipur district of Uttar Pradesh have alleged that police have asked them to not make any announcements over the loudspeaker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X