• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

2 குழந்தைக்கு மேல் போனால்.. வேலை கிடையாதா.. மானியமும் இல்லையா.. பின்னோக்கி போகும் உ.பி.!

Google Oneindia Tamil News

லக்னோ: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று உபி முதல்வர் யோகி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி மீறினால் அரசு வேலை கிடையாதாம்.. மான்யம் கிடையாதாம்.. சலுகை கிடையாதாம்.. தேர்தலில் போட்டியிட முடியாதாம்..!

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தலுக்கு முன்னதாகவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் சட்டம் இயற்ற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது..

அதன்படி, உபியில் குறைந்த அளவிலான வளங்கள் இருப்பதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

கொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு! கொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு!

 சாராம்சம்

சாராம்சம்

இந்த சட்டத்தின் முக்கிய சாராம்சங்கள் இதுதான்: மாநில அரசின் எல்லா நலத்திட்டங்களும் 2 குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவாக பெற்றுள்ள குடும்பத்துக்கு மட்டுமே சேரும்... 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்டமும் கிடையாது... 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

மான்யம்

மான்யம்

அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள்... 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

 முதலாளி

முதலாளி

அதேபோல, இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு, முழு சேவையின் போது 2 கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும்.. மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளம், அலவனஸ், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் 3 சதவீதம் அதிகரிக்கும்... இதில், ஒரே குழந்தையுடன் நிறுத்தி கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும்..

 குடும்ப கட்டுப்பாடு

குடும்ப கட்டுப்பாடு

மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும்.. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும்... சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம் முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்... அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்" என்பன உள்ளிட்ட மசோதாக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

யோகி

யோகி

இதுகுறித்து முதல்வர் யோகி சொல்லும்போது, இந்த சட்ட வரைவு மசோதாவினால் மக்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கக்கூடும்.. வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை மக்கள் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணிகள்.. சில சமூகங்களில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளது.. அதனால், சமூகத்தை மையமாக கொண்ட விழிப்புணர்வு முயற்சிகள் தேவை என்பதனால் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

English summary
UP Population Bill Draft Says, There is no Government Jobs Subsidy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X