லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ மை சன்.. அப்பாவின் தொகுதியை எடுத்துக் கொண்ட மகன்.. அகிலேஷ் யாதவின் அதிரடி அறிவிப்பு!

லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அசம்கார்க் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அசம்கார்க் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட இருக்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கு இந்தியா முழுக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெற்று இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல

பெரிய கூட்டணி

பெரிய கூட்டணி

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இந்தநிலையில் சமாஜ்வாதி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

எங்கு போட்டி

எங்கு போட்டி

உத்தர பிரதேசத்தில் அசம்கார்க் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட இருக்கிறார். சமாஜ்வாதி கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரான அசம் கான், ராம்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

அப்பா பெயர்

அப்பா பெயர்

அசம்கார்க் தொகுதி முலாயம் சிங் யாதவின் தொகுதியாகும். இங்கு கடந்த தேர்தலில் முலாயம் சிங் போட்டியிட்டு எம்.பியானார். இப்போது அந்த தொகுதியில் அவர் மகன் போட்டியிடுகிறார். மாறாக முலாயம் சிங் மெயின்புரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

ஏன் இல்லை

ஏன் இல்லை

இதன் மூலம் அகிலேஷ் யாதவ், பாரம்பரியமாக போட்டியிடும் கன்னாஜ் தொகுதியில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதே சமயம் சமாஜ்வாதி கட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதிலும் முலாயம் சிங் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UP : SP Chief Akhilesh Yadav to contest from Azamgarh, Azam Khan to contest from Rampur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X