லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி இன்ஸ்பெக்டர் கொலையில் திருப்பம்.. போலீசிடம் புகார் அளித்தவரும், குற்றவாளியும் ஒரே ஆள்தான்!

உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டதா உ.பி கலவரம் ?

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று அங்கு பசுக்காவலர்களுக்கு திடீர் என்று வந்த போனில், புல்சந்தார் காட்டுப்பகுதியில் 25 பசுமாடுகள் கொல்லப்பட்டு கிடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்று பசுக்கொலை தொடர்பாக கலவரம் நடந்தது.

    இதை கட்டுப்படுத்த சென்ற போது சுபோத் குமார் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முக்கிய குற்றவாளி

    முக்கிய குற்றவாளி

    இந்த கொலையில் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த யோகேஷ் ராஜ்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறான். இவன்தான் கொலை மற்றும் கலவரத்தை தூண்டியது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவன் மீது 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்கு புகார் இருக்கிறது.

    இவன்தான் அவன்

    இவன்தான் அவன்

    இவன்தான் நேற்று காலை போலீசிடம் பசுக்களை கொன்று விட்டார்கள் என்று புகார் அளித்தது. அதாவது யோகேஷ் ராஜ்தான் போலீசுக்கு புகார் அளித்து அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டு, பின் இன்னொரு பக்கம் கலவரத்தையும் தூண்டி இருப்பது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்களும் வடஇந்திய ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    என்ன பேசுகிறான்

    என்ன பேசுகிறான்

    அந்த வீடியோவில் அவன், அங்கிருக்கும் தனது தொண்டர்களிடம் பேசுவது தெரிய வந்துள்ளது. அதில் போலீஸ் இதில் நடவடிக்கை எடுக்கும் வரை கலவரத்தை நிறுத்த கூடாது. சாலையில் எந்த வாகனத்தையும் செல்லவிட கூடாது. போலீசுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவது பதிவாகி உள்ளது.

    தலைமறைவு

    தலைமறைவு

    தற்போது இவன் தலைமறைவாகிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை 4 மணிக்கே இவன் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் போலீசுக்கு அவன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்தும் அவனை இன்னும் கைது செய்யவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    UP Violence: Accused no.1 has complained of Cow Slaughter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X