லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மணிக்கு நடந்தது.. மீட்க கூட ஆள் இல்லை.. சாலையில் உயிருக்கு போராடிய மக்கள்.. உத்தர பிரதேச அவலம்!

Google Oneindia Tamil News

லக்னோ: இன்று உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பலியாக அவர்களுக்கு சரியான நேரத்தில் மீட்பு உதவி கிடைக்காததுதான் காரணம் என்கிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லோரும் உத்தர பிரதேச எல்லைக்கு செல்ல வேண்டும் என்பதால் லக்னோ நோக்கி சென்றுள்ளனர்.

இவர்கள் எல்லோரும் உத்தர பிரதேசத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள். அவுரியா என்ற பகுதிக்கு அருகே நடந்த இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளது.

லிப்ட் கேட்டு சென்றனர்.. உ.பி விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது எப்படி? பகீர் பின்னணி!லிப்ட் கேட்டு சென்றனர்.. உ.பி விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது எப்படி? பகீர் பின்னணி!

நெடுஞ்சாலை பகுதி

நெடுஞ்சாலை பகுதி

இந்த விபத்து நடந்த பகுதி அவுராவியாவிற்கு அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியாகும். மாநில நெடுஞ்சாலை என்பதால் அந்த சாலை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள். அதேபோல் அந்த சாலை மிகவும் குறுகிய சாலை ஆகும். இந்த சாலைக்கு அதிக பழக்கம் இல்லாதவர்கள் என்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

லாரி விபத்து

லாரி விபத்து

இந்த லாரி விபத்தில் சிக்கிய பின் அங்கு மீட்பு பணிகள் சரியாக நடக்கவில்லை. அதாவது விபத்து நடந்தது 3 மணி. அங்கு அப்போது மக்கள் யாரும் இல்லை. இரண்டு லாரியில் வந்த எல்லோரும் மோசமாக காயம் அடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். ஊரடங்கு என்பதால் அந்த நேரத்தில் அங்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை. நீண்ட நேரமாக அவர்கள் மீட்பு பணிக்கு காத்து இருந்தனர்.

கார் ஒன்று வந்தது

கார் ஒன்று வந்தது

அதன்பின் அந்த பகுதிக்கு கார் ஒன்று வந்துள்ளது. அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதேபோல் ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார்தான் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டனர். தீயணைப்பு படையினர் வரவில்லை. பேரிடர் மீட்பு படையினர் வரவில்லை. அதிகாலை 4.30 மணிக்கு பிறகுதான் மீட்பு பணியே தொடங்கியது என்று கூறுகிறார்கள். மிக தாமதமாகவே இவர்கள் எல்லோரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

எப்படி பலியானார்கள்

எப்படி பலியானார்கள்

இதனால் அவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியாகி உள்ளனர். 24 பேரில் பலர் பலியாகி காரணம் அதிக ரத்த போக்குதான் என்கிறார்கள். ஒருவேளை சீக்கிரமே இவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு இருந்தால் இவ்வளவு பேர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஊரடங்கு காரணமாக இந்தியாவில் இப்படி பிற மாநில தொழிலாளர்கள் வரிசையாக பலியாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Uttar Pradesh accident: Migrant workers died after the rescue happened late in the early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X