லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அகிலேஷ்.. செம வியூகம்.. புது போஸ்டிங்.. கலக்கத்தில் மாயாவதி!

தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக அகிலேஷ் புது அரசியலை கையில் எடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க அகிலேஷ் யாதவ் சமயோஜிதமாக காய் நகர்த்துகிறார். யாதவர்களை தவிர தலித் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்களுக்கு அவர் பொறுப்பு அளித்து வருகிறார். இதனால் மாயாவதியின் பகுஜன் சமாஜில் இருந்து சமாஜ்வாடிக்கு தலைவர்கள் படையெடுக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவின் ஆட்சி அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. இதனால் விரைவில் அங்கு தேர்தல் நடக்க உள்ளது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

இந்த தேர்தலை மனதில் வைத்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விஜய் யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரங்களில் பாஜகவை சரமாரியாக விமர்சித்தும் வருகிறார்.

பாஜக

பாஜக

"விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.. அவர்கள் எவ்வாறு நசுக்கப்படுகிறார்கள் என்பதை பாருங்கள்... விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை... மின் கட்டணம் விவசாயிகளையும் வணிகர்களையும் நசுக்குகிறது... உத்தரபிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது எங்கள் கடமை.. பாஜக ஆட்சியின் ஐந்து வருடங்களில், தலித்துகளும் சிறுபான்மையினரும் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. வரப்போகும் தேர்தலில் தங்களின் சமாஜ்வாதி கட்சிதான் பாஜகவுக்கு ஒரு சவாலாக இருக்க போகிறது" என்பதை தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்கிறார்.

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

மற்றொருபுறம், தங்களுக்கு கடந்த காலங்களில் கூட்டணி விஷயங்களில் நிறைய கசப்பான அனுபவங்கள் கிடைத்துள்ளதால், கூட்டணி விஷயத்தில் ஜாக்கிரதையாகவே இருப்பதாகவும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது போன்ற எண்ணமே இப்போது தங்களுக்கு இல்லை என்றும் கூறி வருகிறார். இதுதான் அம்மாநில அரசியலில் விவாதமாக உருவெடுத்துள்ளது.

 உபி முதல்வர்

உபி முதல்வர்

இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் மாயாவதி.. ஒரு காலத்தில் உபி முதல்வராகவும் இருந்தவர்.. இப்போது மாயாவதிக்கு கடினமான காலம் சூழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இப்போதைக்கு வெறும் 7 எம்எல்ஏக்களை மட்டுமே கையில் வைத்துள்ளது... இதுபோக, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 எம்எல்ஏக்களை அக்கட்சியில் இருந்து நீக்கவும் செய்தார். இது அவருக்கு மேலும் அதிருப்தியை பெற்று தந்தது.

 விவகாரம்

விவகாரம்

எனவே, விரைவில் சமாஜ்வாதியில் இணையலாம் என்றுகூட செய்திகள் கசிந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான் பகுஜன் சமாஜின் சட்டமன்ற குழு தலைவர் லால்ஜி வெர்மாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. இப்படி நாலாபக்கமும் மாயாவதிக்கு அதிருப்தி சூழ்ந்தநிலையில்தான், கூட்டணி விவகாரமும் வெடித்து கிளம்பியது.

 முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்னொரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.. இத்தனை காலம் அதாவது இவரது தந்தை முலாயம் சிங் யாதவ் காலத்தில் இருந்தே யாதவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அகிலேஷ் தன்னுடைய தேர்தல் வியூகத்தை மாற்ற நினைக்கிறார்.. அதன்படி தலித்துகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

மாயாவதி

மாயாவதி

இதுதான் மாயாவதிக்கு மேலும் சிக்கலை தந்துள்ளது.. காரணம், பட்டியலின தலைவராகவும், அச்சமூகத்தினருக்கு நம்பிக்கை பாத்திரமாகவும் இத்தனை கால அரசியலில் அங்கு திகழ்ந்து வந்தவர்தான் மாயாவதி.. இதே ரூட்டை அகிலேஷும் பிடித்துள்ளது மாயாவதிக்கு சிக்கலை தந்து வருகிறது. ஏற்கனவே காங்கிரசும் தலித் ஓட்டை அள்ள பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகின்றனர்.. பாஜகவும் தலித் வாக்குகளையே குறி வைத்து வருகிறது.. இப்படி நாலாபக்கமும் ஒரே நோக்கத்தில் 4 கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன.. இதில் அநேகமாக அகிலேஷுக்கு ஓரளவு ஆதரவு கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 அறிவிப்பு

அறிவிப்பு

யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பார், தனது கட்சி 2022 உபி சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதியுடன் உடன் கூட்டணி வைத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அக்டோபர் 27ம் தேதி ஹல்தர்பூர் மைதானத்தில் ராஜ்பாரின் சுஹெல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியால் (SBSP) பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இதில் அகிலேஷ் யாதவ் ராஜ்பருடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 என்ன ஆகும்?

என்ன ஆகும்?

சமீபத்தில் பிஎஸ்பியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 சிட்டிங் எம்எல்ஏக்கள், லால்ஜி வர்மா மற்றும் ராமச்சால் ராஜ்பர் ஆகியோர் சமாஜ்வாதி கட்சிக்கு மாறியதும் அகிலேஷுக்கு கூடுதல் பலத்தை தந்து வருகிறது.. இதுபோக தலித் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்களுக்கு புது புது பொறுப்புகளை தந்து அசத்தி வருகிறார் அகிலேஷ்.. அதுமட்டுமல்ல, வரும் தேர்தலுக்குள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மேலும் 8 எம்எல்ஏக்களும் விரைவில் அகிலேஷ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன...

 வியூகம்

வியூகம்

அவர்களை தவிர, அவர்களின் ஆதரவாளர்களும் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. இப்படி தொடர்ந்து சமாஜ்வாதியில் இருந்து முக்கிய நபர்கள் வெளியேறுவது, அக்கட்சியில் விரைவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடும் என்றே எதிர்பாரக்கப்படுகிறது.. யாதவர்கள் அல்லாதவர்களை, ஓபிசிகளை ஈர்க்க அகிலேஷ் மேற்கொள்ளும் வியூகம் சரிவருமா? இனிமேல்தான் தெரியவரும்.

English summary
Uttar pradesh, Akhilesh reaching out to non yadavs Mayawatis leadership crisis exodus from BSP continues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X