லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பியில் பாஜகவிற்குதான் பெரும்பான்மை.. டஃப் பைட் கொடுக்கும் அகிலேஷ்.. ஜீ நியூஸ் பரபர சர்வே!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் பதவிக்கு அதிக தகுதி உள்ள நபர் யோகி ஆதித்யநாத் என்றும், பாஜக கூட்டணிதான் பெரும்பான்மை பெறும் என்றும் ஜீ செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. Design Boxed என்ற நிறுவனத்துடன் இணைந்து ஜனதா கா மூட் என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடையே இங்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜக - சமாஜ் வாதி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அங்கு மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

உத்தர பிரதேச தேர்தல்: மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?உத்தர பிரதேச தேர்தல்: மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?

பிரதமர் பதவி

பிரதமர் பதவி

இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் யார் என்று ஜீ செய்தி நிறுவனம் உத்தர பிரதேசத்தில் சர்வே நடத்தி உள்ளது.அதில், பிரதமர் மோடிதான் இப்போதும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 72 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 28 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் யோகி ஆதித்யநாத்தான் அங்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று 47 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

அகிலேஷ் யாதவ்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று 35 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மாயாவதிதான் இந்த பதவிக்கு தகுதியானவர் என்று 9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 5 சதவிகிதம் பேர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜகவிற்கு 41 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று, சமாஜ்வாதி கட்சிக்கு 34 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சி வாக்கு சதவிகிதம்

கட்சி வாக்கு சதவிகிதம்

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 6 சதவிகிதம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 245-267 இடங்களையும், சமாஜ்வாதி கூட்டணி 125 -145 இடங்களையும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் 5-9 இடங்களையும், காங்கிரஸ் 3-7 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மண்டலவாரி விவரம் என்ன?

மண்டலவாரி விவரம் என்ன?

மண்டல வாரிய முதல்வர் ஆக தகுதி உள்ளவர்களின் ஆதரவு


ஆவாத் மண்டலம்

ஆதித்யநாத்: 47%
அகிலேஷ் யாதவ்: 34%
மாயாவதி: 10%
பிரியங்கா காந்தி : 5%
மற்றவர்கள்: 4%

பூர்வான்சல் மண்டலம்

ஆதித்யநாத் : 48%
அகிலேஷ் யாதவ்: 35%
மாயாவதி: 9%
பிரியங்கா காந்தி: 5%
மற்றவர்கள்: 4%

பந்தல்காண்ட்:

ஆதித்யநாத்: 50%
அகிலேஷ் யாதவ் : 31%
மாயாவதி: 11%
பிரியங்கா காந்தி: 5%
மற்றவர்கள்: 3%

ரூகேகாண்ட :

ஆதித்யநாத் : 47%
அகிலேஷ் யாதவ்: 37%
மாயாவதி: 9%
பிரியங்கா காந்தி: 3%
மற்றவர்கள்: 4%

மத்திய உத்தர பிரதேசம்:

ஆதித்யநாத்: 47%
அகிலேஷ் யாதவ்: 35%
மாயாவதி: 9%
பிரியங்கா காந்தி: 4%
மற்றவர்கள்: 5%

மேற்கு உத்தர பிரதேசம்:

ஆதித்யநாத்: 43%
அகிலேஷ் யாதவ்: 41%
மாயாவதி: 9%
பிரியங்கா காந்தி : 4%
மற்றவர்கள்: 3%

English summary
Uttar Pradesh: BJP to win the election, Akhilesh SP to give thought competition says Zee news survey today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X