லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீயில் சர்க்கரை கம்மியா போச்சாம்.. பொண்டாட்டியை கொன்று.. பப்லுவுக்கு இவ்வளவு ஆத்திரம் ஆகாது!

டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார் கணவர்

Google Oneindia Tamil News

லக்னோ: ஏன் டீ-யில் சர்க்கரை கம்மியா இருக்கு.. என்று கேட்டதுடன் மனைவி ரேணுவை கொலையே செய்துவிட்டார் கணவர்! இந்த அக்கிரமம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி ரேணு.. அவருக்கு 35 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 12 வருஷங்கள் ஆகின்றன.. 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது திரும்பவும் கர்ப்பமாக இருக்கிறார் ரேணு.

 uttar pradesh man his kills wife serving tea less sugar

இந்நிலையில் வழக்கம்போல் ரேணு, கணவருக்கு காலையில் டீ போட்டு தந்துள்ளார்.. அதில் சர்க்கரை குறைவாக போட்டுவிட்டார் போலும்.. ஏன் சர்க்கரை கம்மியா இருக்கு என்று கேட்டுள்ளார்.. அப்படியே வாக்குவாதம் முற்றி சண்டை அதிகமாகிவிட்டது.

கடைசியில் கிச்சனுக்கு ஓடிப்போய் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து ரேணுவின் கழுத்தை அறுத்துவிட்டார் பப்லு. காலையில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள், ரேணுவின் சத்தம் கேட்டு அலறி எழுந்தன.. அதற்குள் ரேணு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதை பார்த்ததும் பப்லு ஓட்டம் பிடித்தார்.

கணவர் என்ன செய்கிறார்.. ஜன்னலில் எட்டி பார்த்த மனைவி.. அதிர்ச்சி.. அடுத்து நடந்த கொடுமை! கணவர் என்ன செய்கிறார்.. ஜன்னலில் எட்டி பார்த்த மனைவி.. அதிர்ச்சி.. அடுத்து நடந்த கொடுமை!

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சடலத்தை பார்த்து பதறி, பிறகு போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசார் ரேணுவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ரேணுவை கொன்ற அந்த காய்கறி கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.. 3 பிள்ளைகள் இந்த கொலைக்கு சாட்சி சொல்லி உள்ளார்கள்.. பப்லுவை தேடி கொண்டிருக்கிறார்கள்.. டீயில் சர்க்கரை கம்மி என்பதற்காக கர்ப்பிணியை கொன்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!

Recommended Video

    China- க்கு பாடம் கற்பிக்க வேண்டும்... எல்லைக்கு புறப்பட்ட சிறுவர்கள்

    English summary
    uttar pradesh man his kills wife serving tea less sugar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X