லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசியைவிட கொரோனா பரவாயில்லை.. உ.பி.யிலிருந்து பணிக்கு திரும்பும் 30 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: பசியை விட கொரோனா எவ்வளோ பரவாயில்லை என கூறி 30 லட்சத்திற்கும் மேலான உத்தரப்பிரதேசத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை அடுத்து டெல்லி, தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாததாலும் பணமில்லாததாலும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் கால்களில் செருப்பு கூட அணியாமல் பல நூறு கி.மீ. தூரம் நடந்தே சென்றனர்.

கொரோனா ஒழிந்தாலும் அதிகரிக்கும் மன அழுத்தம் எச்சரிக்கும் நிபுணர்கள் - மதுரையில் கவுன்சிலிங் கொரோனா ஒழிந்தாலும் அதிகரிக்கும் மன அழுத்தம் எச்சரிக்கும் நிபுணர்கள் - மதுரையில் கவுன்சிலிங்

உ.பி.

உ.பி.

இந்த நிலையில் கொரோனாவை விட பசி மிகவும் மோசம் என கூறி உத்தரப் பிரதேச மாநிலத்தில் 30 லட்சத்திற்கும் மேலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி வருகிறார்கள். இதுகுறித்து ஒரு தொழிலாளர் கூறுகையில் உத்தரப்பிரதேசத்திலேயே பணி இருந்தால் நாங்கள் திரும்பியிருக்க மாட்டோம்.

ஊதியம்

ஊதியம்

நான் பணியாற்றிய நிறுவனம் அதன் பணியை இன்னும் தொடங்கிவில்லை. எனினும் கிடைத்த பணியை செய்யலாம் என்பதால் பணியிடத்திற்கு வந்துவிட்டோம். பசியை விட கொரோனா எவ்வளவோ மேல். என் குழந்தைகள் பசியால் சாகக் கூடாது. மும்பையில் நல்ல ஊதியம் கிடைக்கும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து என்னால் சமாளிக்க முடியவில்லை.

மளிகைக் கடை

மளிகைக் கடை

படிக்காவிட்டால் இங்கு எந்த வேலையும் இல்லை. அப்படியே வேலை தேடினாலும் வேலை இல்லை என்றே கூறுகிறார்கள். அரசு ரேஷன் பொருட்களை தருகிறது. ஆனால் மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது. 100 நாட்கள் வேலை திட்டத்தை தவிர்த்து உ.பி.யில் பணியாற்ற வேறு வேலைகள் இல்லை. நான் அகமதாபாத்தில் மளிகைக் கடை வைத்துள்ளேன்.

பசி கொடுமை

பசி கொடுமை

அந்த கடை வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. கடையை திறக்காவிட்டாலும் வாடகை கொடுத்துதானே ஆக வேண்டும். அதற்கு நான் எப்படி கொடுக்க முடியும். சரி கடையை திறந்து வைத்து வியாபாரத்தை நடத்தினால்தான் ஏதோ வாடகை கொடுக்க முடியும் என்றார். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தாலும் பசி கொடுமையால் மீண்டும் பணிக்கு திரும்புகிறார்கள்.

English summary
Uttar Pradesh Migrant workers going back to their work saying Coronavirus is better than hunger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X