தடைகள் நீங்கனுமா? வீட்டில் மாட்டு கோமியத்தை தெளியுங்கள்... பாஜக அமைச்சர் பரபர பேச்சு
லக்னோ: ‛‛வீட்டில் மாட்டு கோமியம் தெளித்தால் வாஸ்து உள்ளிட்ட பல்வேறு தடைகள் நீங்கி பிரச்சனைகள் பறந்தோடும்'' என உத்தர பிரதேச மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் மாட்டு கோமியம் சார்ந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டுள்ளதாக பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.
இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
இது அவ்வப்போது விவாத பொருளாகவும் மாறுவது உண்டு. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாற்றம் செய்யப்படுவதுடன் விவாத நிகழ்ச்சிகளும் அரங்கேறி உள்ளன.

கொரோனா மருந்தாக கோமியம்
இதற்க முன்பு அசாம் மாநில பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்ரியா, ‛‛மாட்டுகோமியம், சாணம் ஆகியவற்றுக்கு கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி உள்ளது'' என்றார். மேலும் சில அமைப்புகள், கொரோனாவுக்கு சிறந்து மருந்து என்பது மாட்டு கோமியம் தான். கொரோனா பாதித்தவர்களுக்கு மாட்டு கோமியம் கொடுத்தால் சரியாகி விடுவார்கள் என கருத்து தெரிவித்து இருந்தனர். டெல்லி உள்பட சில இடங்களில் மாட்டு கோமியம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.

கோமியத்தை தெளித்தால் தடை நீங்கும்
து பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேச மாநில பாஜக அமைச்சர் மாட்டு கோமியம் தடைகளை நீக்கும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி உத்தர பிரதேச மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‛‛பசுவின் கோமியத்தில் கங்கா தேவி வாழ்கிறார். சாணத்தில் லட்சுமி தேவி வாழ்கிறார். மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதன் மூலம் வாஸ்து உள்பட பல்வேறு தடைகள் நீங்கி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பசுக்காப்பகங்கள்
உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்டமாக பசுக்காப்பகங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். நாட்டின் முன்னோடி பசுக்காப்பகங்களை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம் பசுக்களின் பாதுகாப்பு விரைவில் உறுதி செய்யப்படும்'' என்றார்.

உபியில் 2வது முறையாக பாஜக
உத்தர பிரதேச மாநிலத்துக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் தான் தரம்பால் சிங் கால்நடைத்துறை அமைச்சராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.