லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தர பிரதேசத்தில் ''பல'' இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு.. எங்கு தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தொடர்ந்து எடுத்து வரும் முடிவுகள் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் அதிக அளவில் என்கவுண்டர் செய்யப்படுவது, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்காதது, இஸ்லாமிய பெயர்களை மாற்றுவது என்று பல மதம் சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன் ஒருபடியாக அங்கு சில இடங்களில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய உள்ளார்.

ராஜஸ்தானில் அடுத்தடுத்து ஷாக்.. பாஜக எம்.பி. காங்கிரஸுக்குத் தாவினார்!ராஜஸ்தானில் அடுத்தடுத்து ஷாக்.. பாஜக எம்.பி. காங்கிரஸுக்குத் தாவினார்!

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் மற்றும் பைசாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றினார். அலகாபாத், பிரயாக்ராஜ் என்று மாறியது. பைசாபாத் அயோத்யா என்று மாற இருக்கிறது. இன்னும் சில நகரங்களின் பெயர்களை மாற்றும் யோசனையில் இருக்கிறார்.

எங்கு செய்கிறார்

எங்கு செய்கிறார்

இந்த நிலையில் பல இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு செய்து இருக்கிறார். இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள். கோவில்கள் அதிகம் உள்ள இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய முடிவெடுத்துள்ளனர். எங்கு எல்லாம் புனித தலங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த தடையை கொண்டு வர இருக்கிறார்கள்.

இரண்டு இடம்

இரண்டு இடம்

அதன்படி முதல்கட்டமாக அயோத்தி மற்றும் மதுரா முழுக்க இந்த தடையை கொண்டு வர உள்ளனர். அதன்பின் மற்ற நகரங்களில் இந்த தடையை அமல்படுத்த உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு செய்து இருக்கிறார்.

ஏற்கனவே மதுரா

ஏற்கனவே மதுரா

ஏற்கனவே மதுராவில் சில இடங்களில் இந்த தடை அமலில் உள்ளது. தற்போது மதுரா முழுக்க இந்த தடையை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர். ராமருக்கு இந்த பழக்கங்கள் எல்லாம் பிடிக்காது என்பதால் இதை செய்வதாக அவர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar Pradesh Yogi Adityanth may ban alcohol and Non-Veg in holy towns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X