லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரணாசியில் பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: பிரதமர் நரேந்தர மோடி போட்டியிடும் வாரணாசியில்,பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். இங்கு வரும் மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

varanasi police lathi charge against bjp members, who raised slogan against priyanka gandhi

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து வாரணாசியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று சாலை மார்க்கமாக அவர் வானத்தில் பேரணி சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

என்னாது சரித்திர உண்மையா.. இல்லை கமல் அது தரித்திர உண்மை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னாது சரித்திர உண்மையா.. இல்லை கமல் அது தரித்திர உண்மை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அப்போது அங்கிருந்த பாஜகவினர் சிலர், பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷம் போட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏறபட்டது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் பாஜகவினரை கலைந்து போகவைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷமிட்ட நிலையில், போலீசார் பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏறபட்டது.

English summary
lok sabha elections 2019 : varanasi police lathi charge against bjp member, who raised slogan against priyanka gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X