லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை!

வேதங்களை படித்ததன் மூலம் தனக்கு அரசியல் அறிவும் சமூகம் குறித்த பார்வையும் வந்ததாக பிரதமர் மோடி வாரணாசியில் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: மோடி வேட்பு மனு தாக்கல் பேரணி...கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு- வீடியோ

    லக்னோ: வேதங்களை படித்ததன் மூலம் தனக்கு அரசியல் அறிவும் சமூகம் குறித்த பார்வையும் வந்ததாக பிரதமர் மோடி வாரணாசியில் பேசி இருக்கிறார்.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இவர் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார்.

    மாலை 5 மணியளவில் மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

    மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    இந்த நிலையில் வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் இந்த வருடம் மிகப்பெரிய கும்பமேளா நடைபெற்றது. ஆனால் அதில் தாக்குதல் நடத்த எந்த தீவிரவாதிக்கும் துணிச்சல் இல்லை. கடந்த 5 வருடத்தில் எந்த கோவிலிலும் தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    இதுதான் பாஜக ஆட்சியின் சாதனை. எங்கள் கூட்டணியின் வலிமையை இந்த கங்கை நதி இருக்கும் உத்தர பிரதேசம் உணர்த்துகிறது. நாங்கள் இங்கு நடத்திய ரோட் ஷோ அதற்கு மிகப்பெரிய உதாரணம். பாஜக கூட்டணி மீண்டும் வெல்லும் என்பதற்கு இங்கு இருக்கும் கூட்டமே உதாரணம்.

    மோடி வாரணாசி

    மோடி வாரணாசி

    அடிக்கடி மக்கள் கேட்கிறார்கள், மோடி வாரணாசிக்கு என்ன செய்தார் என்று. அதற்கு பதில் சொல்லும் முன் நான் உங்கள் எல்லோரிடமும் ஒன்று சொல்கிறேன். காசி எனக்கு நிறைய செய்து இருக்கிறது. காசி என்னை அதிகம் மாற்றி இருக்கிறது. காசியின் வேத அறிவுடன் மக்கள் ஒன்றிப்போவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

    வேதம் எப்படி

    வேதம் எப்படி

    வேத அறிவை மக்கள் எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும். வேத நாகரீகத்தை நாம் வளர்க்க வேண்டும். இது என்னுடைய சமூக வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை. என்னுடைய அரசியல் வாழ்க்கையிலும் வேதங்கள் பெரிய உதவி புரிந்தது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Vedas have changed me a lot politically says Prime Minister Narendra Modi in Varanasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X