லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் கோவில் கட்ட அயோத்தியில் விஎச்பி பேரணி.. லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்படி கோரிக்கை வைத்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், சிவ சேனா அமைப்பும் தனித்தனியாக இரண்டு பெரிய நிகழ்ச்சிகளை இன்று நடத்துகிறது.

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்படி கோரிக்கை வைத்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், சிவ சேனா அமைப்பும் தனித்தனியாக இரண்டு பெரிய நிகழ்ச்சிகளை இன்று நடத்தியது.

உத்தர பிரதேசத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அயோத்தி - ஜென்மபூமி வழக்கு விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மிகப்பெரிய அரசியல் வழிப்பட்டு நிகழ்வை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், சிவ சேனா அமைப்பும் அயோத்தியில் இன்று நடத்தியது.

தர்ம சன்சாட்

தர்ம சன்சாட்

இந்த இரண்டு நிகழ்வுகளில் அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய தர்ம சன்சாட் நிகழ்ச்சி மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மூலம் இது நடத்தியது. இதற்கு அம்மாநில அரசு ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ராமர் கோவில் கட்ட கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

நிறைய பேர்

நிறைய பேர்

இந்தியா முழுக்க பல பகுதிகளில் இருந்து இதற்காக மக்கள் குவிந்தனர் . இப்போது வரை அங்கு 1 லட்சம் பேர் இதற்காக குவிந்து இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றாக பேரணி நடத்தி பூஜை செய்து, பின் ராமர் கோவில் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்கள். பெண்கள், சிறுவர்கள் கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா அமைப்பு

சிவசேனா அமைப்பு

அதேபோல் சிவ சேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று அயோத்தி சராயு நதிக்கரை ஓரத்தில் மிகப்பெரிய பூஜை நடத்தியது. ராமர் கோவில் கட்ட கோரிக்கை வைத்து இந்த பூஜை நடத்தியது. இதில் 6000 பேர் வரை கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு

இந்த இரண்டு நிகழ்வுகள் காரணமாக, அயோத்தியில் மிகப்பெரிய பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிகழ்விற்கு வந்த தொண்டர்கள் இன்னும் அதே பகுதியியல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
VHP and Shivasena to Hold major function for Ram Temple in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X