லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுடவே இல்லை என்ற நிலையில்.. உ.பி.யில் போராட்டக்கார்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ!

Google Oneindia Tamil News

லக்னோ: தாங்கள் துப்பாக்கிக்சூடு நடத்தவில்லை என்று உத்தரப்பிரதேச மாநில போலீசார் கூறிய நிலையில், போராட்டக்காரர்கள் மீது உத்தரப்பிரதேச மாநில போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து இதுவரை 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் இதில் பலர் துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில போலீசார் தாங்கள் யார் மீது துப்பாக்கிச்சூட நடத்தவே இல்லை என்று மறுத்துள்ளனர்.

மாணவர்கள் படிக்கும் அறையில் கண்ணீர் புகை குண்டு.. பார்வை பறிபோனதாக ஜாமியா பல்கலைக்கழகம் புகார் மாணவர்கள் படிக்கும் அறையில் கண்ணீர் புகை குண்டு.. பார்வை பறிபோனதாக ஜாமியா பல்கலைக்கழகம் புகார்

போலீசார் துப்பாக்கிச்சூடு

போலீசார் துப்பாக்கிச்சூடு

ஆனால் உத்தர பிரதேசத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான கான்பூரில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் கையில் துப்பாக்கிகளுடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள்

கான்பூரில் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இதில் போலீஸ் பூத்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் போலீசார் ஒருவர் தலைகவசம், பாதுகாப்பு கவசங்கள் அணிந்த படி வன்முறை நடந்த சம்பவத்தில் போராட்டக்காரர்களை நோக்கி கையில் துப்பாக்கியை தூக்கிய படி ஓடுவதாக உள்ளது. அவர் மறைவான பகுதிக்கு சென்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபடுவதாக வீடியோவில் உள்ளது.

வீடியோ வெளியானது

வீடியோ வெளியானது

உத்தர பிரதேசத்தில் யாரும் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகவில்லை என்று அம்மாநில போலீசார் உறுதி தெரிவித்த பின்னரே இந்த வீடியோக்கள் வெளிவந்துள்ளது.

13 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர், தியோபந்த், ஷாம்லி, முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹப்பூர், சம்பல், அலிகார், பஹ்ரைச், ஃபெரோசாபாத், கான்பூர், படோஹி மற்றும் கோரக்பூர் உள்பட 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

English summary
police continues to maintain that it has not fired a single bullet at protesters anywhere. Now, evidence that belies this claim has emerged from Kanpur where there were clashes between the police and protesters yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X