லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் முடித்த பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார்

Recommended Video

    Vikas dubey கதையை முடித்த தமிழர் தினேஷ் குமார்

    தீரன் அதிகாரம் ஒன்று- நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம். வட இந்தியாவின் பவேரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய தீரனாக கார்த்தி நடித்து வெளிவந்த படம் இது.

    தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தை 30 ஆண்டுகளாக கலக்கி வந்த ரவுடி விகாஸ் துபே கும்பலின் கதையை ஒட்டுமொத்தமாக முடித்து வைத்திருக்கிறது கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் தலைமையிலான போலீஸ் படை. இந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் ஒரு தமிழர்.

    "நான் கான்பூர்காரன்".. கதறிய ரவுடி.. கொட்டிய மழைக்கு நடுவே.. 60 கேஸ்களுக்கும் ஒரே நாளில் "தீர்ப்பு"

    8 போலீஸ் படுகொலை

    8 போலீஸ் படுகொலை

    கான்பூரில் விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற போது 8 போலீசார் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதில் இருந்து விகாஸ் துபேவின் இறுதி அத்தியாயம் தொடங்கிவிட்டது. விகாஸ் துபேவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் முடிக்கப்பட்டுவிட்டனர். கடைசியாக இருந்தது விகாஸ் துபேதான்.

    ம.பி.யில் கைது

    ம.பி.யில் கைது

    மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவில் ஒன்றில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை சுற்றி வளைத்து தூக்கியது போலீஸ். அதேநேரத்தில் கான்பூரில் விகாஸ் துபேவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் தூக்கி சிறையில் அடைத்தது போலீஸ். இரவோடு இரவாக ம.பி.யில் இருந்து விகாஸ் துபேவுடன் புறப்பட்டது போலீஸ் டீம்.

    என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

    என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

    இன்று காலை மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவுடன் வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபே, என்கவுண்ட்டரில் பலியானார். இந்த என்கவுண்ட்டரை வெற்றிகரமாக நிகழ்த்தியது எஸ்.பி தினேஷ்குமார், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர்.

    சேலம் அதிகாரி

    சேலம் அதிகாரி

    பி.எஸ்.சி. அக்ரி படிப்பை முடித்து ஐ.பி.எஸ். அதிகாரியான தினேஷ்குமார், 2009-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த 33 வயதான இளம் அதிகாரி. விகாஸ் துபே என்கவுண்ட்டர் மூலம் நிஜத்தில் ஒரு 'தீரனாக ' உயர்ந்து நிற்கிறார் தினேஷ்குமார்.

    English summary
    UP Gangster Vikas Dubey was killed in Encounter by the Kanpur SP Dineshkumar who is hailing from TN lead Team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X