லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் மட்டும் இருந்திருந்தேன்.. புருஷன்னு கூட பார்த்திருக்க மாட்டேன்".. ஆவேசமான விகாஸ் துபே மனைவி

உத்தரபிரதேச தாதா விகாஸ் துபே மனைவி ரிச்சா பரபரப்பு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: "போலீஸ்காரங்க என் புருஷனை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டாங்க" என்று ரவுடி விகாஸ் துபே மனைவி ரிச்சா குற்றம் சாட்டி உள்ளார். அதேசமயம், நான் மட்டும் வீட்டில் இருந்திருந்தால், நானே என் புருஷனை சுட்டு கொன்றிருப்பேன்" என்றும் ரிச்சா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Vikas dubey கடைசியாக கொடுத்த வாக்குமூலம்

    என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் விகாஸ் துபே குறித்த சர்ச்சைகள் அடங்கவில்லை.. உத்தரபிரதேசத்தில் இந்த ரவுடி பற்றின செய்திகள் தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    இவரது மனைவி ரிச்சா, கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார்.. தற்போது செய்தியாளர்களிடம் சில விஷயங்களையும் மனம்விட்டு பகிர்ந்து கொண்டுள்ளார்.. அப்போது அவர் பேசியதாவது:

    ரவுடி விகாஸ் துபே ஜாமீன் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை ரவுடி விகாஸ் துபே ஜாமீன் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

    பிரச்சனை

    பிரச்சனை

    "விடிகாலை 2 மணி இருக்கும்... எனக்கு என் கணவர் போன் பண்ணினார்.. வீட்டை விட்டு தப்பிச்சு போய்டு... நான் இப்போ ஒரு ஃபிரண்ட் வீட்டில் ஒளிஞ்சிட்டு இருக்கேன்.. போலீஸ்காரங்க இருந்து தப்பி ஓடிட்டே இருக்கேன்"ன்னு சொன்னார். அதுதான் அவர் என்கிட்ட பேசின கடைசி வார்த்தை.. அதுக்கப்பறம் மீடியாவில் வந்த செய்திகளை பார்த்துதான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் மட்டும் வீட்டில் இருந்திருந்தால், துப்பாக்கி எடுக்கக் கூட தயங்கியிருக்க மாட்டேன்.

    கொன்னுட்டாங்க

    கொன்னுட்டாங்க

    அப்படி ஓடி ஒளிஞ்சிருக்கேன்னு சொன்னாரே தவிர, எந்த இடம்னு சொல்லல.. பிக்ரு வீட்டுல இருக்கும்போது, நிறைய போலீஸ்காரங்க எங்க வீட்டுக்கு வந்து மதியம், இரவு நேரங்களில் அடிக்கடி சாப்பிட்டு போவாங்க.. நடுராத்திரி வரை வீட்டிலதான் தங்கியிருப்பாங்க... ஆனா, என் புருஷனை இப்படி யூஸ் பண்ணிக்கிட்டு, கடைசியில கொன்னுட்டாங்க..

    நீதித்துறை

    நீதித்துறை

    இப்பகூட சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் அதிக நம்பிக்கை எனக்கு இருக்கு.. என் கணவர் மரணத்துக்கு சரியான நீதி கிடைக்கும்... அவர் ஒரு குற்றவாளியாக இருக்கலாம்... ஆனா எனக்கு நல்ல கணவர்.. என்னுடைய 2 குழந்தைங்களுக்கும் நல்ல அப்பா.. பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பார்.. மாசம் மாசம் செலவுக்கு 40 ஆயிரம் ரூபாய் தந்துடுவார்.

    அண்ணன்

    அண்ணன்

    என் பெரிய பையன் சாந்தனு ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து வருகிறான்.. சின்ன பையன் ஆகாஷ் பிளஸ் 2-வில் 90 சதவீத மார்க் எடுத்திருக்கிறான்.. என் கணவர் இறந்துட்டதா சொல்றாங்க.. ஆனா என்னை பொறுத்தவரை அவர் உயிரோடுதான் இருக்கார்.. 1990-ல்தான் அவரை முதன்முதலா பார்த்தேன்.. என் அண்ணனுக்கு அவர் ஃபிரண்டு.. அப்பறம்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

    சொத்து

    சொத்து

    நல்லா படிச்சால், நல்ல நல்ல வாழ்க்கை அமையும் என்று அவர் அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்.. அவங்க அம்மா, அப்பா மேல ரொம்ப மரியாதை... ஆனால், மீடியாவில் அவரை பற்றின வேறு முகம்தான் காட்டப்பட்டது.. அவர் எங்களுக்காக ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்தை விட்டுவிட்டு போயிருக்காருன்னு செய்தி வருது.. ஆனால் அது எல்லாம் பொய்.. எங்ககிட்ட எதுவும் இல்லை, நீங்களே யோசிச்சு பாருங்க, ஒருத்தருக்கு கோடி கணக்கில் சொத்து இருந்தால், 1,600 சதுர அடி வீட்டில் இருப்பார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

    English summary
    up gangster vikas dubeys wife richa dubes interview
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X