லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷூலேஸ் கட்ட வச்சதே தப்பு.. இதுல அமைச்சர் கொடுத்த வியாக்கியானத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

லக்னோ: "இதையெல்லாம் எதுக்குப்பா தப்பா பாக்கறீங்க.. ராமனின் செருப்பை வெச்சுக்கிட்டே ஆட்சி நடத்திய நாடுதானே இது.. பாராட்டுங்க" என்று அரசு அதிகாரியை ஷூலேஸ் கட்ட வைத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேத்து சர்வதேச உலக யோகா தினம்.. அதன்படி நாடு முழுவதும் யோகா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் யோக நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுபான்மையினர் துறை அமைச்சர் லட்சுமி நாராயண் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Viral Video about Govt Officer tie the Ministers Shoelace

நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கிளம்பியபோது, அவரது கால் ஷூவில் இருந்த லேஸ் அவிழ்ந்துவிட்டது. இதை பார்த்த அங்கிருந்த ஒரு அரசு அதிகாரி, அமைச்சரின் காலுக்கடியில் உட்காந்து ஷூ லேஸை கட்டிவிட்டார்.

இதுபோல பல தலைவர்களுக்கு எத்தனையோ பேர் இப்படி உதவி உள்ளனர். அவ்வளவு எதற்கு? வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பேரணியாக சென்றபோது கூட்ட நெரிசலில் 3 பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கீழே விழுந்த பத்திரிகையாளரின் ஷூக்களை பிரியங்கா காந்தி எடுத்து கையில் வைத்திருந்தார். அதனால் இது ஒரு வகையில் உதவி என்று எடுத்து கொண்டாலும், அமைச்சர் இதற்கு வேறு மாதிரியான பதிலை தந்துள்ளார்.

அதிகாரி ஷூ லேஸ் கட்டிவிட்டதற்கு "ராமனின் செருப்பை வைத்தே ஆட்சி நடத்திய நாடு இது. அந்த மாதிரி இதை ஒரு சகோதரரின் உதவியாக பாருங்கள், பாராட்டுங்கள்" என்று சொன்னார். சும்மா போயிருந்தால் ஆவது பரவாயில்லை.. இப்படி ஒரு மேட்டரை கொளுத்தி போட்டு விடவும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

English summary
UP Minister gets gov Officer to tie his Shoe lace, this Video goes on Social Now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X