லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் டீலிற்கு உயிர் கொடுத்தது பாஜக.. ஏகே 203 துப்பாக்கி தொழிற்சாலையை திறந்து வைத்து மோடி பேச்சு

ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டு இருந்தது, பாஜகதான் அதற்கு உயிர் கொடுத்தது என்று பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டு இருந்தது, பாஜகதான் அதற்கு உயிர் கொடுத்தது என்று பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் பேசியுள்ளார்.

பீகாரில் இன்று காலை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அதன்பின் உத்தர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி ஏகே - 203 துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரஷ்யா ஒப்பந்தம்

ரஷ்யா ஒப்பந்தம்

ரஷ்ய தொழில்நுட்பம் மூலம், ரஷ்யாவின் உதவியுடன் இந்த ஏகே -203 துப்பாக்கி உருவாக்கப்பட உள்ளது. இது ஏகே 47 ரக துப்பாக்கியின் அப்டேட் செய்யப்பட்ட ரகம் என்று கூட சொல்லலாம். இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் கோரவா பகுதியில் துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.

Also Read | வரலாறு முக்கியம் பிரதமரே: மோடியின் தவறை சுட்டிக் காட்டிய நடிகை

மோடி பேச்சு

மோடி பேச்சு

இதில் பேசிய பிரதமர் மோடி, இந்த துப்பாக்கி தொழிற்ச்சாலை அமேதிக்கு புதிய முகம் அளிக்கும். இது ரஷ்யாவின் உதவியுடன் செய்யப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

ரபேல் ஒப்பந்தம்

ரபேல் ஒப்பந்தம்

ரபேல் ஒப்பந்தம் பல வருடங்களாக செய்யப்படாமல் இருந்தது. நாங்கள் விமானத்தை வாங்க முயற்சித்தோம். ஆனால் சிலர் அதை தடுக்க முயன்றார்கள். உச்ச நீதிமன்றம் கூட ரபேல் ஒப்பந்தத்தில் எங்களைத்தான் ஆதரித்து தீர்ப்பு வழங்கியது.

காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் ஆட்சியில் புல்லட் புரூப் ஆடைகள் கூட வாங்காமல் இருந்தனர். நாங்கள்தான் 2,30,000 புல்லட் புரூப் ஆடைகளை வாங்கினோம். இதற்கு முந்தையை ஆட்சியில் ராணுவத்திடம் நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கூட இல்லாமல் இருந்தது.

நாங்கள் செய்தோ

நாங்கள் செய்தோ

எல்லோரும் இந்தியாவில் உருவாக்குவோம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் உண்மையில் இந்தியாவில்தான் உருவாக்கினோம். அதனால்தான் இப்போது அமேதியில் தொழிற்சாலையை உருவாக்கி உள்ளோம். இதை 8-9 வருடங்களுக்கு முன்பே இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

English summary
We were the one who gives life to Rafale deal says PM Modi in Amethi Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X