லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘சௌகிதார்’ பாஜகவையும்.. ‘நியாய்’ காங்கிரசையும் வெல்வோம்.. மாயாவதி சபதம்

Google Oneindia Tamil News

லக்னோ: பிரதமர் மோடியின் காவலன் நாடகம் (சௌகிதார் நாடகம்) அவரை காப்பாற்றது என்று மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இந்தநிலையில், இருவரும் இணைந்து முதல் முறையாக பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர். சஹரன்பூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாயாவதி, சௌகிதார் பாஜகவையும், நியாக் காங்கிரசையும் வெல்வோம் என்றார். எங்கள் கூட்டணி பாஜகவுக்கு எதிரானது மட்டுமல்ல; காங்கிரசுக்கும் எதிரானது தான் என்று கூறினார்.

We will win the chowkidar BJP and the Nyay Congress .. Mayawati vows

காங்கிரஸும், பாஜகவும் "ஒருவருக்கொருவர் பிரதிபலிப்பு படங்களை காட்டும் கண்ணாடி தான்' என்றும் காங்கிரஸ் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பவில்லை என்றும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதேநேரம், வெறுப்புணர்வு கொண்ட கொள்கைகளையே பாஜக கொண்டுள்ளதாகவும், மாதம் 6,000 ரூபாய் வழங்குவதற்கு பதிலாக அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றார்.

பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்

அனைத்து தொழிலிலும் காங்கிரஸ் தனியாக போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்தாலும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறிய மாயாவதி, முஸ்லிம்களின் வாக்குகள் இந்த தேர்தலை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார். பாஜகவுக்கு எதிராக சண்டையிட காங்கிரசுக்கு சரியான வலுவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.

தங்களது கூட்டணிக்கு 80% மக்கள் ஆதர உள்ளதாகவும் 20 சதவீதம் மட்டுமே மற்ற கட்சிகளை ஆதரிக்கின்றனர் என்றும் கூறினார். முன்னதாக, 'இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா' என்று சித்தரித்தது. பிரதமர் மோடியை இந்தியாவாக பாஜக சித்தரித்து அதே தவறை செய்வதாகவும் தெரிவித்தார்.

English summary
lok Sabha elections 2019: Mayawati vows That We will win the 'chowkidar' BJP and the 'Nyay' Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X