புதருக்குள்ளே.. நைஸாக பெண்ணுடன் ஒதுங்கிய இளைஞர்.. அங்கே போனால் ஏற்கனவே 2 பேர்.. ஒரே அக்கப்போர்..!
லக்னோ: இளம்பெண் ஒருவரை, இருட்டு நேரத்தில் பூங்காவில் வைத்து பலாத்காரம் செய்த 3 பேரை உத்தரபிரதேச போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் வெடித்து கிளம்பி வருகின்றன.. பெண் பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி கொண்டிருக்கிறது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் பலாத்கார சம்பவங்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்..
ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம்

கர்ப்பிணி
அங்கு நடக்கும் திருமண நிகழ்வுகளில் கூட துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறைகள் தலைதூக்கி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது. அதிலும் கடந்த வாரம் கர்ப்பிணி என்றும் பாராமல், காமுகன் ஒருவன் செய்த செயல், மிர்சாபூர் மாவட்டத்தையே வெலவெலக்க வைத்துவிட்டது.. 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.. அந்த மருத்துவமனை பாத்ரூம் சென்றபோது, அதே மருத்துவமனை துப்புரவு ஊழியர் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டார்..

பூங்கா
கடகடவென அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து, பலாத்காரமும் செய்ய முயற்சித்துள்ளார். இறுதியில் அந்த நபரை, மற்ற நோயாளிகள் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். இப்போது நொய்டாவில் ஒருகொடுமை நடந்துள்ளது.. இளம்பெண் ஒருவர், தன்னுடைய நண்பருடன் மாலை நேரம் பூங்காவிற்கு சென்றார்... இருள் சூழ்ந்து கொண்டு வந்தது.. பிறகு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான புதர்பக்கம் அவர்கள் இருவரும் சென்றனர்.. அந்த நேரம் பார்த்து, அந்த புதருக்குள் ஏற்கனவே 2 இளைஞர்கள் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார்கள்..

புதர்
அவர்களை பார்த்ததுமே அந்த பெண் பதறிவிட்டார்.. ஆனாலும், 3 பேரும் சேர்ந்து பெண்ணின் வாயை பொத்தி, அதே புதருக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியில், அந்த பெண் நிலைகுலைந்து வீடு வந்துசேர்ந்தார்.. அழுதுகொண்டே நடந்த கொடுமைகளை தன் பெற்றோரிடம் சொல்லவும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் விசாரணை துரிதமாகியது..

ரஞ்சித்
இறுதியில் ரஞ்சித் என்பவர்தான் சிக்கினார்.. இவர்தான் அந்த பெண்ணின் நண்பர்.. பார்க்கில் சென்று மனம்விட்டு பேசலாம் என்று நைசாக அழைத்து வர செய்ததுடன், அந்த பார்க் அருகில் உள்ள புதருக்குள் தன்னுடைய நண்பர்களை முன்கூட்டியே ஒளிய சொன்னதும் ரஞ்சித் தான் என்பது தெரியவந்தது.. பிறகு பெண்ணை பலாத்காரம் செய்த பங்கஜ், ரஞ்சித் ஆகிய 2 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர்.. பவன் என்பவர் தப்பி ஓடிவிட்டதால், அவரை தேடி வருகிறார்கள்..