லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹலோ.. யாரை தலித்துன்னு சொல்றீங்க.. அன்றே கதறவிட்ட மாயாவதி.. இன்று ஒதுங்குவது ஏனோ? ஏங்கும் தொண்டர்கள்

மாயாவதி தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: இப்படி ஒரு முடிவை எடுத்தது மாயாவதிதானா? ஏன் இந்த தேர்தலில் இருந்து பின்வாங்கினார்? மாயாவதி சொல்லக்கூடிய காரணங்கள் ஏற்புடையதுதானா? ஒரு தலித் பெண் அரசியல் தலைவர், தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்துள்ளார் என்றால், நிஜமான அரசியல் சூழல் எதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.

துணிச்சலுக்கு பெயர் போனவர் மாயாவதி.. ஜெயலலிதாவின் முன்னோடி.. 1977லேயே ஒரு பொதுக்கூட்டத்தில் "யாரை பார்த்து அரிஜன் என்று சொல்லுகிறீர்கள்? இன்னொரு முறை அரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினால், சும்மா இருக்க மாட்டேன்" என்று ஒரு மத்திய அமைச்சரையே எதிர்த்து பேசியவர்தான் இந்த மாயாவதி..

நாளடைவில் கன்சிராமின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்..

விடாமல் சீண்டப்படும் தனுஷ் - ஐஸ்வர்யா.. புற்றீசல் போல சுற்றிய யூ டியூப் சேனல்கள்.. ஏன் இந்த வன்மம்? விடாமல் சீண்டப்படும் தனுஷ் - ஐஸ்வர்யா.. புற்றீசல் போல சுற்றிய யூ டியூப் சேனல்கள்.. ஏன் இந்த வன்மம்?

கன்ஷிராம்

கன்ஷிராம்

செல்லுமிடமெல்லாம் தலித்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர்.. உறுதியான நிலைப்பாட்டினால், தன்னை அரசியலில் நிலைநிறுத்தி கொண்டவர்.. அதற்காகவே 39 வயதிலேயே உபியின் முதல்வரானவர்.. ஆட்சியில் இருந்தபோதும், தலித்துகள் நலனில் கூடுதல் அக்கறை காட்டியவர்.. சிறுபான்மையினர் நலன்களை பெற்று தந்தவர்.. ஒரு தலித் பெண் அரசியலில் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த அதேநேரம் சொத்து சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் தானாக போய் சிக்கி கொண்டவர்..

 பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ்

ஒருகாலத்தில் 207 தொகுதிகளை கைப்பற்றிய பகுஜன் சமாஜ், 2012 சட்டமன்ற தேர்தலில் 80 தொகுதிகளை பெற்று சரிவை கண்டது.. 2017-ல் வெறும் 19 தொகுதிகளை பெற்றது.. 2019 எம்பி தேர்தலில் 10 தொகுதிகளை பெற்றது... இப்படி படிப்படியான சரிவுகளுக்கு ஒரே காரணம், மாயாவதி மீதான நம்பகத்தன்மை அங்கு குறைந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.. ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாகவும் இது பார்க்கப்படுகிறது..

 மாயாவதி

மாயாவதி

பாஜக மத்தியில் ஆட்சியமைத்தபிறகு, மாயாவதியின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துவிட்டன.. அவ்வப்போது வெளியே வந்து பாஜகவை விமர்சித்தாலும், மாயாவதியின் அந்த பழைய அரசியல் பாணி காணாமல் போய்விட்டதாகவே கருதப்படுகிறது.. இந்த முறை சட்டசபை தேர்தலுக்கு உபி தயாராகி வருகிறது.. அதற்குள் ஹத்ராஸ் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, என இந்த ஒரு வருடத்தில் உபியில் மிகப்பெரிய பிரச்சனைகள் நடந்தது.. அப்போதுகூட மாயாவதியை காணோம்..

 காணவில்லை

காணவில்லை

பெண்கள் நலனில் அக்கறை கொண்ட மற்றும் தலித் மக்களின் பாதுகாவலர் என்று சொல்லப்பட்ட மாயாவதியை, ஹத்ராஸ் பிரச்சனையில்கூட ஒதுங்கியிருந்தது அதிர்ச்சியாகவே பாரக்கப்பட்டது. மாயாவதி ஏன் ஒதுங்கினார் என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின.. மாயாவதி எங்கே, ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார் என்று பிரியங்கா காந்தியும் 2 முறை கேள்வி எழுப்பியிருந்தார்..

 உடல்நிலை

உடல்நிலை

ஆனால், மாயாவதிக்கு சில சிக்கல்கள் உள்ளதால்தான் அவரால் தீவிர அரசியலில் செயல்பட முடியவில்லை என்று காரணங்கள் பகுஜன் சமாஜ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தார்களாம்.. மாயாவதி ஒதுங்க இதுதான் காரணமா என்று உறுதியாக தெரியவில்லை..

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி


எப்படியும் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு அனைவரின் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், திடீரென பின்வாங்கிவிட்டார்.. இவரது இந்த முடிவு அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உறைய வைத்து வருகிறது.. இதனால் கட்சி தாவல்கள் சமீப காலமாக இயல்பாகவே எழ ஆரம்பித்துவிட்டன.. பகுஜன் சமாஜ் கரைய ஆரம்பித்துள்ளது.. அதேசமயம், மாயாவதிக்கு இந்த தேர்தலில் முழு நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.. சமீப காலமாக அவரது பேட்டிகளை எடுத்து பார்த்தால், பாஜக மீதான நம்பகத்தன்மையைதான் பெருமளவு வெளிப்படுத்தி இருக்கிறார்..

 பாஜக

பாஜக

''தேர்தல் ஆணையத்தின் மீதான அச்சம் அரசு எந்திரத்துக்கு இருக்க வேண்டும்... சுதந்திரமான முறையில், நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்... ஆனால், அரசு எந்திரத்தை பாஜக தவறாகப் பயன்படுத்தாமல், வாக்கு எந்திரத்தில் எந்தத் தில்லுமுல்லும் பாஜக செய்யாமல் தேர்தலைச் சந்தித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தோற்றுவிடும்" என்று மாயாவதி வெளிப்படுத்தியிருந்ததை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது..

 நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

உண்மையை சொல்லப்போனால், தேர்தலில் போட்டியிட மாயாவதிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. கொரோனா வைரஸ் பரவலை உபி அரசு கையாண்டதில் நிறைய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.. இத்தனை ஆண்டு பாஜக ஆட்சியல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. தலித் பிரிவினர், சிறுபான்மையினர் அடக்குமுறை, சிறுபான்மை மீதான தாக்குதல்கள் பெருகிகிடக்கின்றன.. இந்த நேரத்தில் மாயாவதி களத்தில் குதித்தால், அவருக்கு நிச்சயம் ஆதரவு பெருகும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..

 மீண்டும் வருவாரா?

மீண்டும் வருவாரா?

அதுமட்டுமல்ல, சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோ பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அறுதியிட்டு சொல்லின.. எனவே, இத்தனை கால உழைப்பும் வீணாகிவிடக்கூடாது என்றால், இன்னமும் தன்னை மலை போல நம்பி கொண்டிருக்கும் தொண்டர்களுக்காக மாயாவதி தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்..

 மறுபரிசீலனை

மறுபரிசீலனை

4 முறை முதல்வராக பதவி வகித்த, விளிம்பு நிலை மக்களுக்காக பேசக்கூடிய முக்கியமான தலைவர் என்பதால் மாயாவதி மறுபடியும் அரசியலில் களமிறங்க வேண்டுமென்பதே அவரது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது... இல்லாவிட்டால், தலித் அரசியலின் நம்பிக்கையாக பார்க்கப்படும் மாயாவதியின் அடையாளம் விரைவில் மாயமாகிவிடும் என்றும் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.. மாயாவதி தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா?!

English summary
Why BSP chief Mayawati will not contest UP polls, Why did Mayawati lose the political plot?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X