மாமனார் செய்த கண்றாவியை பார்த்தீங்களா.. 80 வயசாகுது.. கதறி துடித்த மருமகள்.. உச்சக்கட்ட டென்ஷன்
லக்னோ: மருமகளின் செய்கையினால், மாமனார் உச்சக்கட்ட டென்ஷன் ஆனார்.. அதுக்காக இப்படியா செய்வது? என்று உபி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .
தன் மாமனார்-மாமியாரை ஒரு ஆண் எளிதில் சமாளித்து நல்ல பெயரை வாங்கி விடக்கூடும்.. ஆனால், அந்த வீட்டிற்குள் நுழையும் பெண்ணுக்கு அது அவ்வளவு சுலபம் இல்லை...
அதுவும் புதிய சூழலை சந்தித்தாலும் எத்தனையோ பிரச்சனைகளையும் அங்கே எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. இதில் வெற்றி பெறுவதுதான் இறுதியில் மேல் கடினமாகிவிடுகிறது.
“அதெப்படி டீ மட்டும் தரலாம்.. டிபன் எங்கே?”.. கோபத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்!

மாமனார் டார்ச்சர்
அதாவது, வரதட்சணை பிரச்சனை என்றாலே மாமியார் தான் காரணமென்றாகி விடுகிறது.. பாலியல் தொல்லை என்றாலே, அந்த வீட்டு மாமனார் தான் காரணமாகிறார் என்று சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே மலிவான செயல்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலம், தானேவில் ஒரு சம்பவம் நடந்தது.. அவர் பெயர் பாண்டுரங் பாட்டீல். 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது.

மருமகள்
வழக்கமாக இவருக்கு காலை டிபன் மற்றும் டீ இரண்டையும் மருமகள் தருவது வழக்கம்.. ஆனால் சம்பவத்தன்று காலை 11:30 மணி ஆகியும் மருமகள் டிபன் தரவில்லை... டீயும் போட்டு தரவில்லையாம்.. இதன் காரணமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமனார், உடனே துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டு தள்ளிவிட்டார்.. இதில், அந்த பெண்ணின் அடி வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்..

தாத்தா
இப்போது இன்னொரு சம்பவம், கிட்டத்தட்ட இதே போல நடந்துள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் வசித்து வருகிறார் அந்த பெரியவர்.. 80 வயதாகிறது.. ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவர்களுடனேயே ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.. இந்த தாத்தாவுக்கு ரொம்ப கோபம் வருமாம்.. வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நிறைய கோபப்பட்டு, மகன், மருமகளை திட்டி கொண்டே வந்துள்ளார்..

மாமனார் கோபம்
இப்படித்தான், 2 நாளைக்கு முன்பு, மருமகள் இவருக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.. இவரும் சாப்பிட ஆரம்பித்தார்.. பிறகுதான் தெரிந்தது, அந்த சாப்பாட்டில் உப்பு அதிகமாகிவிட்டது.. இவ்வளவு உப்பையா கொட்டி வைக்கிறது? என்று மருமகளை திட்டி உள்ளார் தாத்தா.. தெரியாமல் நடந்துவிட்டது என்று மருமகள் சொல்லியும், மாமனார் திட்டி கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் மருமகள் பொறுமை இழந்துவிட்டார்.. அதனால் பதிலுக்கு பதில் பேசியுள்ளார்..

மாமனார் - மருமகள்
ஏற்கனவே கோபக்கார தாத்தாவுக்கு, இது மேலும் ஆத்திரத்தை தந்தது.. என்கிட்டயே எதிர்த்து பேசுகிறாயா? என்று கேட்டு, அங்கேயிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மருமகளை நோக்கி சுட்டுவிட்டார்.. இதில் நெஞ்சிலேயே குண்டு பாய்ந்து, மருமகள் சம்பவ இடத்திலேயே சுருண்ட விழுந்து இறந்துவிட்டார்.. அப்போதும் தாத்தா டென்ஷன் ஆகவில்லை.. மகனுக்கு போனை போட்டு,தகவலை சொல்லி உள்ளார்.. அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்டு போலீசார் வந்துவிட்டனர்..

திருடர்கள்
போலீஸை பார்த்தும்கூட, தாத்தா டென்ஷன் ஆகவில்லை.. என்ன நடந்தது என்று விசாரித்தற்கு, "வீட்டிற்குள் திடீர்னு திருடர்கள் புகுந்து விட்டார்கள்... நான் அவங்களை துப்பாக்கியால் சுட பார்த்தேன்.. அது தவறுதலாக மருமகள் மீது குண்டுகள் பாய்ந்து விட்டது" என்றார்.. ஆனால், தாத்தா சொல்லிய கதையை போலீசார் நம்பவில்லை.. திருடர்கள் எந்த வழியாக வீட்டிற்குள் வந்தார்கள் என்று போலீசார் கேட்டார்கள்..

வாக்குமூலம்
அதற்கு அவர், இதோ பின்பக்க வாசல் வழியாகத்தான் நுழைந்தனர் என்றார்.. ஆனால், தாத்தா சொன்ன, அந்த கதவு, உள்பக்கமாக பூட்டி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்... பிறகு தாத்தாவை ஸ்டேஷனுக்கு அள்ளி கொண்டு போனார்கள் போலீசார்.. அங்கே சென்றதும்தான், சாப்பாட்டில் உப்பு அதிகமாகி விட்டதால், மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என்று தாத்தா கடகடவென நடந்ததை சொல்லிவிட்டார். "உப்புசப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு அட்டகாசமா" என்று சொல்வோமே.. அது இதுதான் போல..!