India
  • search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதம் கதம்.. சொல்லி அடிக்கும் மம்தா.. தீதீ வரபோறாங்களாம்.. ஏற்கனவே அகிலேஷை சமாளிக்க முடியல.. பரபர உபி

Google Oneindia Tamil News

லக்னோ: வரப்போகும் தேர்தலில் உத்தரபிரதேசம் யாருக்கு என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வரும்நிலையில், அகிலேஷ் யாதவுக்கு தன்னுடைய ஆதரவை மீண்டும் தெரிவித்து, பாஜகவுக்கு ஜெர்க் தந்துள்ளார் மம்தா பானர்ஜி..!

2024-ம் ஆண்டில் நடக்க போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே தேசிய அரசியல் தயாராகி வருகிறது.. அந்த தேர்தலை கணக்கு செய்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த ஒரு வருட காலமாகவே ஈடுபட்டு வருகிறார்.

அதற்காகவே, பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசிவருகிறார்.. எனினும், மத்தியில் அமையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதை மம்தா விரும்பவில்லை என்று செய்திகள் அப்போதே வெளியாகியன..

உ.பி வளர்ச்சிக்கு 'சிவப்பு' மாஃபியாக்களுக்கு 'பச்சை' விளக்கை காட்டுவார் அகிலேஷ் - அமித்ஷா தாக்கு உ.பி வளர்ச்சிக்கு 'சிவப்பு' மாஃபியாக்களுக்கு 'பச்சை' விளக்கை காட்டுவார் அகிலேஷ் - அமித்ஷா தாக்கு

 சோனியா காந்தி

சோனியா காந்தி

அதற்கேற்றார் போல், டெல்லி சென்றிருந்த மம்தா, பல தலைவர்களை சந்தித்தாரே தவிர, சோனியா காந்தியை சந்திக்கவில்லை.. இதை பற்றி செய்தியாளர்கள் அப்போது கேட்டதற்கு, ஒவ்வொரு முறை டெல்லி வரும்போதெல்லாம் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லையே? என்று நச்சென பதில் சொன்னார்.. அப்போதே காங்கிரஸை மம்தா, ஓரங்கட்ட நினைத்துவிட்டதாகவும் கருதப்பட்டது.. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்படும் கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்று காங்கிரஸ் சொல்லி வருகிறது.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

ஆனால், காங்கிரஸ் தலைமையையும் சில கட்சி‌கள் ஏற்க‌ மறுக்கின்றன.. எனவேதான், 3வது அணிக்கு மம்தா பானர்ஜியை தலைமையேற்க முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிகிறது... இதற்கு அடுத்தபடியாகத்தான், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களையும் தங்கள் கட்சி பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மம்தா ஈடுபட ஆரம்பித்தார்.. இனி காங்கிரஸை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வருகிறார்..

 தேர்தல்

தேர்தல்

இதன் தாக்கம் உத்தரபிரதேசத்தில் தற்போதே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.. நடக்க போகும் உபி மாநில தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அங்கு தீவிரத்தை கையில் எடுத்து வருகிறது.. ஒருகாலத்தில் அங்கு முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வலுவடைந்து விட்டது.. தன்னால் முடிந்தவரை பிரியங்கா காந்தி அங்கு தனிநபராக கட்சியை வெற்றி பெற வைக்க போராடி கொண்டிருக்கிறார்..

மற்றபடி அகிலேஷூக்கான ஆதரவுகள் தினந்தோறும் பெருகி கொண்டே இருக்கிறது.. அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக தேசிய கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.. அடுத்த எம்பி தேர்தலில் பாஜகவை ஒழித்துவிட வேண்டும் என்ற கருத்துடன் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 அகிலேஷ்

அகிலேஷ்

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே மம்தா அறிவித்திருந்தார்.. அதேசமயம், வரும் 8 ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவுத் தெரிவித்து பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக மம்தா சொன்னபோது, "2024ம் ஆண்டு நடைபெற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்... கோவா மாநிலத்தில் கட்சிக்கு அடித்தளம் போட்டு விட்டேன்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

திரிபுரா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. அடுத்த 2 வருடங்களில் மேற்கு வங்க மாநிலத்தை வலிமையாக்க வேண்டும்.,, இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் 42 இடங்களையும் பெற முடியும். விரைவில், கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறும்" என்று கூறியிருக்கிறார். சமாஜ்வாதிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல இணக்கமான போக்கு உள்ளது.. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ், நேரிலேயே சென்று பிரசாரம் செய்திருந்தார்.. இப்போது அகிலேஷூக்காக மம்தா உபி வருகிறார்..

சீட்டுக்கள்

சீட்டுக்கள்

அகிலேஷூக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், தன்னால் பாஜகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்க முடியும் என்று மம்தா பெரிதாகவே நம்புகிறார் என்றாலும், வேறு காரணமும் சொல்லப்படுகிறது. சில சீட்டுக்களை கூட்டணி என்ற கணக்கில் பெறுவதற்கான முயற்சியாககூட இது இருககலாம் என்கிறார்கள்.. சொந்த மாநிலத்தில் பெருவாரியான சீட்டுகளையும், மற்ற மாநிலங்களில் இருந்து சில சீட்டுகளையும் வெற்றி பெற்றுவந்தாலே எதிர் கட்சிகளின் கூட்டணியின் பெரிய கட்சியின் தலைமைக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஒருவேளை அதற்கும் மம்தா குறி வைக்கலாம் என தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், மம்தாவின் உபி பிரச்சாரம் பாஜகவுக்கு கலக்கத்தையே தரக்கூடும்.. அகிலேஷூக்கு பெருகும் ஆதரவை பார்த்துதான், வேறு வழியில்லாமல் உள்துறை அமைச்சரே வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.. இப்போது மம்தாவும் இறங்கபோவது, பாஜகவுக்கு மேலும் சிக்கலையும் நெருக்கடியையுமே பெற்று தர வாய்ப்புள்ளது.. எனினும் பாஜக அனைத்தையும் முறியடித்து மேலே வருமா? பார்ப்போம்...!

English summary
Will Akhilesh win in UP Assembly Election and TMC will contest the 2024 lok sabha elections in UP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X