• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இந்துத்துவா".. பாஜகவுக்கு செக்?.. அதிரடியில் குதித்த ஜாம்பவான்கள்.. அனலடிக்கும் உத்தரபிரதேச தேர்தல்

Google Oneindia Tamil News

லக்னோ: விரைவில் உபியில் தேர்தல் நடக்க உள்ளநிலையில், பாஜகவின் செயல்பாடுகள் மும்முரமாகி கொண்டிருக்கின்றன.. இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களப்பணியில் வேகம் காட்டி வருகின்றன.
உபியை பொறுத்தவரை நாட்டிலேயே பெரிய மாநிலம்.. மொத்தம் 403 சட்டமன்ற இடங்களை கொண்டது.. அதிக சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலமும் உபிதான்.

குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா.. 6 மாதங்களுக்கு தொடரும் சிக்கல்கள்.. பட்டியலிடும் ஆய்வாளர்கள்குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா.. 6 மாதங்களுக்கு தொடரும் சிக்கல்கள்.. பட்டியலிடும் ஆய்வாளர்கள்

இந்த மாநிலத்தில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிதான் மத்தியில் பலத்தை பெற்றிருக்கும்.. அதிலும் மாநிலங்களவையில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும்.

தேர்தல்

தேர்தல்

எனவேதான், உபியில் எப்போது தேர்தல் வந்தாலும், நாட்டு மக்களின் கவனம் பெரிதாக அங்கு குவிக்கப்பட்டுவிடும்.. இப்போதும் அங்கு தேர்தல் வர உள்ளது.. இன்னும் சில மாதங்களே இருந்தாலும், இப்போதே பாஜக களமிறங்கிவிட்டது.

 கட்சி தாவல்

கட்சி தாவல்

பாஜகவை பொறுத்தவரை தங்கள் கொள்கைகள், சாதனைகள் போன்றவற்றை முன்வைத்து ஓட்டு கேட்பதைவிட, வேறு சில நுணுக்கங்களை தேர்தல் சமயத்தில் கையில் எடுப்பது வழக்கம்.. அதில் ஒன்றுதான் கட்சி தாவல் நடவடிக்கைகள்.. அதாவது, பிற கட்சிகளை சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுத்து, அதன்மூலம் எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைத்து, பாஜகவின் பலத்தை பன்மடங்காக்கி காட்டுவதுதான். இதை பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடித்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது.

மம்தா

மம்தா

இந்த முறையும் உபியில் இந்த ஐடியாவைதான் கையில் எடுத்துள்ளது.. முதல்குறியே காங்கிரஸ் கட்சிதான்.. அதில் முக்கிய புள்ளியான ஜிதின் பிரசாதாவை தட்டி தூக்கிவிட்டது.. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நபர்களை தங்கள் பக்கம் தாவ செய்து, மம்தாவுக்கு நெருக்கடி தந்ததுபோலவே, இப்போது காங்கிரசுக்கு செக் வைத்து வருகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காரணம், கடந்த 2 வருடங்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், யாரெல்லாம் அந்த கட்சியில் அதிருப்தியில் உள்ளார்களோ, அவர்களுக்குதான் வலையை பாஜக அங்கு விரித்து வைத்துள்ளது. இதைதவிர, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பாஜகவிற்கு அடுத்தடுத்து வர இருப்பதாக கூறப்படுகிறது..

பிரபலங்கள்

பிரபலங்கள்

அதேபோல, பிரபலமானவர்களை பாஜகவுக்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து பிரச்சாரம் செயவது பாஜகவின் இன்னொரு முயற்சியாகும்.. இந்த பிரபலங்கள் டிவி, சினிமா ஏன், டிக்டாக் என்று அனைத்திலும் பிரபலமாக உள்ளவர்களை வாரி அணைத்து வருவதும் பாஜகவுக்கு ஓரளவு பலனை தந்து வருகிறது,.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

இதனிடையே, காங்கிரசும் இத்தனை காலம் இல்லாமல் திடீரென தற்போது விழித்து கொண்டுவிட்டது.. பிரியங்கா மிகப்பெரிய பிளானையே உபியில் வைத்துள்ளார்.. ஒரு வருடமாகவே களப்பணியில் இறங்கி வருகிறார்.. அங்கேயே முகாமிட்டு, இந்த முறை எப்படியாவது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்..

 முதல்வர் யோகி

முதல்வர் யோகி

கடந்த 6 மாத காலமாகவே குறிப்பாக கொரோனா தொற்று அதிகமான சூழலில், முதல்வர் யோகி மீதான அதிருப்தி அந்த மாநில மக்களுக்கு அதிகமாகவே உள்ளது.. மேலும் பாஜக மேலிடத்துடன், யோகிக்கு லேசான புகைச்சலும் உள்ளது.. அதனால் யோகிக்கு மீண்டும் வெற்றி கிட்டுமா? மக்கள் அவரை முன்புபோலவே அங்கீகரிப்பார்களா? என்பதே சந்தேகமாக உள்ளது.. இதைதான் காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது... அத்துடன், பிராமணர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறிவைத்து காங்கிரஸ் பிளான் போட்டு வருகிறது.

 தலித்துகள்

தலித்துகள்

அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சி விறுவிறுப்பான பணியில் ஈடுபட்டு வருகிறது.. பிராமணர்கள், தலித்துகளுக்கு எதிரான கட்சிதான் பாஜக என்று பிரச்சாரங்களை இப்போதே முன்வைக்க தொடங்கிவிட்டது.. இதற்கு ஆதரவாக விகாஸ் துபே மரணத்தை உதாரணமாக காட்டி, பிராமணர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கோரி தன்னுடைய தேர்தல் அரசியலை முடுக்கிவிட்டுள்ளது..

ஓவைசி

ஓவைசி

மற்றொரு புறம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் களமிறங்கி விட்டது.. ஆரம்பமே அந்த கட்சிக்கு பிராமணர் வாக்குகள்தான் குறியாக உள்ளது.. இப்படி பெரிய பெரிய கட்சிகள் களத்தில் குதித்துள்ள நிலையில், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அறிவித்துவிட்டார்.. 100 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்தும் விட்டார்.. இவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவாலை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது.

 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் மட்டுமே உள்ள தன்னுடைய ஆட்சியை மற்ற மாநிலங்களிலும் வளர்த்தெடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.. அதற்காகத்தான், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, குஜராத், தேர்தலுடன் உபி சட்டசபை தேர்தலும் போட்டியிட மும்முரமாகி வருகிறார்.. கல்வி, சுகாதாரத்தில் புதிய திட்டங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களில் மானியம் அளிப்பது போன்ற புதிய திட்டங்களுடன், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

யாத்திரை

யாத்திரை

இதற்காகவே ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் அடிக்கடி உபிக்கு வந்து போய் கொண்டிருக்கிறார்.. இதற்காகவே, நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, 'திரங்க சங்கல்ப யாத்திரை' என்ற பேரணியை ஆம் ஆத்மி நடத்தியும் வருகிறது.. எப்படியாவது, தன்னுடைய கட்சிக்கு ஒரு தேசிய மதிப்பு உருவாகும் என்று கணக்கு போட்டு வருகிறார். ஆக, பல்வேறு ஜாம்பவான்கள் உபியில் களமிறங்க உள்ளநிலையில், கடந்த காலங்களைவிட, இந்த முறை பாஜகவுக்கு நெருக்கடி கூடிக் கொண்டுதான் போகிறது..

நெருக்கடி

நெருக்கடி

தேர்தல் நடக்க உள்ள, பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு இப்போது செல்வாக்கு குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.. உபி மட்டும்தான் ஒரே பலமாக இருக்கிறது.. இந்த மாநிலத்துக்கும் இத்தனை பேர் திரண்டு போட்டிபோட வருவதால், பாஜகவுக்கு இனி தலைவலிதான்..!

English summary
Will BJP Win again in Uttar pradesh and what will Congress do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X