லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை பண்ணுங்க.. யாருக்கும் கொரோனா வைரஸ் வராது.. உ.பி முதல்வர் ஆதித்யநாத் சொன்ன ஐடியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியமான தீர்வு ஒன்றை சொல்லி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியமான தீர்வு ஒன்றை சொல்லி இருக்கிறார்.

Recommended Video

    Corona outbreak: கொரோனா வராமல் தடுக்க உ.பி.முதல்வர் கொடுத்த ஐடியா

    கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3000 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 2900 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள்.

    அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 88000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகில் மொத்தம் 60 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    கேரளாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸை அம்மாநில அரசு திறமையாக சமாளித்தது. அங்கு மொத்தம் 3 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. எல்லோரையும் அம்மாநில அரசின் சுகாதாரத்துறை குணப்படுத்தியது. அதேபோல் கொரோனா வைரஸ் சந்தேகம் இருந்த 3000 பேரை தனியாக கண்காணித்தது. அந்த மூன்று பேருக்கும் மொத்தமாக கொரோனா சரியாகிவிட்டது என்று உறுதி செய்யப்பட்ட பின்பே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி கட்டுப்படுத்துவது

    எப்படி கட்டுப்படுத்துவது

    இந்த நிலையில் கொரோனவை கட்டுப்படுத்துவது எப்படி என்று உத்தர பிரதேச முதல்வர் ஐடியா கொடுத்துள்ளார். அதில், கொரோனா இந்தியாவில் வரமால் இருக்க நம்முடைய உணவு பழக்கம்தான் காரணம். நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்கமும், பணிகளும், வழிபாட்டு முறையும் காரணம். யோகா இருப்பதால் நமக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் எதுவும் ஏற்படுவது இல்லை.

    யோகா செய்தால்

    யோகா செய்தால்

    நம்முடைய யோகா மூலம் கொரோனவை விரட்டி அடிக்க முடியும். ஆம் உலகம் உடல் மற்றும் மன குறைபாடுகளால் கஷ்டப்படுகிறது. நாம் யோகா செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும், மாரடைப்பு தடுக்கப்படும், கிட்னி சரியாகும், கல்லீரல் சரியாகும், அதேபோல் கொரோனா வைரஸை இதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

    பெரிய பரபரப்பு

    பெரிய பரபரப்பு

    அவரின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் எல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவிலும் கூட இப்போது கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் 3000 பேர் வரை கொரோனா வைரஸ் மூலம் பலியாகி உள்ளனர். வல்லரசு நாடுகள் எல்லாம் இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் ஆதித்யநாத் இப்படி பேசி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    With Yoga, We can fight coronavirus says Uttar Pradesh CM Adityanath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X