India
  • search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்பின் உச்சம்.. "காதலிக்காக ஆணாக மாறும் பெண்!" அடுத்து அறுவை சிகிச்சைதான்.. நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

லக்னோ: தோழியை திருமணம் செய்து கொள்ள, அத்துணை முயற்சிகளையும் எடுத்து வருகிறார் ஒரு இளம்பெண்..!

உத்தரபிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 20 வயதாகிறது.. பிரக்யாராஜ்: ஃபபமாவ் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ படித்து வந்தார்.

சக மாணவி ஒருவரை இவர் தீவிரமாக காதலித்துள்ளார்.. அந்த பெண்ணும் இவரை காதலித்துள்ளார்.. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

சென்னையில் பயங்கரம்.. மரம் விழுந்து காரில் சென்ற வங்கி பெண் மேலாளர் பலி.. கால்வாய் பணி தான் காரணமா? சென்னையில் பயங்கரம்.. மரம் விழுந்து காரில் சென்ற வங்கி பெண் மேலாளர் பலி.. கால்வாய் பணி தான் காரணமா?

ஆபரேஷன்

ஆபரேஷன்

வீட்டில் போய் தங்கள் முடிவுகளை சொன்னார்கள்.. வழக்கம்போல் எதிர்ப்பு கிளம்பியது.. 2 தரப்புமே கொந்தளித்தார்கள்.. கல்யாணம் செய்தால், நாங்கள் இருவரும்தான் செய்து கொள்வோம் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்கள். இதையடுத்து, அந்த பெண் தன்னை ஆணாக மாற்றி கொள்ள விரும்பினார்.. அதற்காக ஸ்வரூப்ராணி நேரு மருத்துவமனைக்கு சென்று உறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் மோகித் ஜெயினை அணுகியுள்ளார்.

விருப்பம்

விருப்பம்

தொடர்ந்து, அந்த பெண் மனநல ஆலோசனைக்கும் பரிந்துரைக்கப்பட்டார்... தன்னுடைய பாலின அடையாளத்தில், அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்பதும் சிகிச்சையில் தெரியவந்தது.. இதையடுத்து, அந்த பெண்ணின் முழு விருப்பத்துடன் ஆணாக மாற்றும் சிகிச்சை, 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பமானது. முதலில் உடலின் மேல் புறத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.. அடுத்ததாக, அவருடைய உடலில் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது...

ட்ரீட்மென்ட்

ட்ரீட்மென்ட்

இன்னும் ஒரு சில மாதங்களில், அவரது பிறப்பு உறுப்பை மாற்றுவதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. இதற்கு பிறகு இன்னொரு ட்ரீட்மென்ட் இருக்கிறதாம்.. அதன்பெயர், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சை என்கிறார்கள்.. இந்த சிகிச்சையும் முடிந்துவிட்டால், கடைசியாக மீசை, தாடிதான்.. தாராளமாக மீசை, தாடியுடன், நடத்தையிலும் முழு மாற்றம் காணலாம் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.. ஆக மொத்தம் காதலுக்காக, தன் முழு உடம்பையே மாற்றி கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார் தோழியின் வருங்கால "கணவன்"..!

ஆபரேஷன்

ஆபரேஷன்

இப்படித்தான் நம்முடைய மதுரையில் 2 மாதத்துக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. தோழிகள் 2 பேரும் உருகி உருகி காதலித்தனர்.. கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. அதற்காக, ஆணாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் அந்த பெண் செய்துகொண்டார்.. மதுரை ராஜாஜி மருத்துவமனையில்தான் ஆபரேஷன் நடந்தது.. ஆண் தன்மையை அடைவதற்காக மரபணு அதாவது ஹார்மோன் ஊசியையும் செலுத்தி கொண்டு வந்தார் அந்த பெண். பிறகு பெயரை மாற்றி கொண்டார்.. கல்யாணமும் செய்து கொண்டனர்..

தாம்பத்யம்

தாம்பத்யம்

ஒருவீடு எடுத்து ஒன்றாகவும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர்.. விஷயம் தெரிந்து, பெற்றோர் ஆவேசமாக கிளம்பி வந்தார்கள்.. மகளை சமாதானப்படுத்தினர்.. திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் வரை விஷயம் சென்றது.. கடைசியில், "ஆணாக மாறிய தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை" என்று எழுதி கொடுத்து விட்டு, பெற்றோருடன் கிளம்பி சென்றுவிட்டார்.. இந்த பெண்ணை நம்பி, காதலுக்காக, தன் உடம்பையே மாற்றி கொண்டு, ஆபரேஷனும் செய்த நிலையில், யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாய் நிற்கிறார் அந்த பெண்.. கொடுமை..!

English summary
woman becomes a man to marry her girlfriend in uttar pradesh தோழியை மணக்க விரும்பி, ஆபரேஷன் செய்துள்ளார் அவரது பள்ளி தோழி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X