• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

2 மேட்டர்கள்.. ரூட்டை திருப்பிய பாஜக.. "ஜின்னா, பாகிஸ்தானை" தொட்ட யோகி.. திருப்பி அடிப்பாரா அகிலேஷ்?

Google Oneindia Tamil News

லக்னோ: "அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள்.. நாங்கள் சர்தார் பட்டேலை வணங்குபவர்கள்... அவர்களுக்கு பாகிஸ்தான் பிரியமானது.. நாங்களோ, தாய்நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்கிறோம்" என்று உபி முதல்வர் யோகி போட்ட ட்வீட், அகிலேஷ் ஆதரவாளர்களுக்கு டென்ஷனை எகிற விட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது... எனினும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 5 கொண்டாட்டம்: தொடங்கிய கச்சேரி.. யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..இப்படி பண்ணிட்டாங்களேபிக் பாஸ் 5 கொண்டாட்டம்: தொடங்கிய கச்சேரி.. யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..இப்படி பண்ணிட்டாங்களே

தடை

தடை

தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக, ஜனவரி இறுதி வரை பேரணிகள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.. இந்த தடையை வரும் 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவும் பிறப்பித்துவிட்டது.. இதனால் பிரச்சாரங்களை எப்படி நடத்துவது என்று தேர்தல் நடக்க போகும் 5 மாநில அரசியல் கட்சிகள் விழித்து கொண்டு வருகின்றன.. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபி தேர்தலை நாடே எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்கள் பிரச்சாரங்களை பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

 மதம், சாதி

மதம், சாதி

அதிலும் பாஜக படுதீவிரமாக உள்ளது.. உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு சாதியையும் கணக்கு செய்து, அதற்கேற்ப வியூகம் அமைத்து வருகிறது.. அதேபோல, சிறுபான்மையினர் வாக்குகளை பெறவும் முனைப்பு காட்டி வருகிறது.. இந்த முறை சமாஜ்வாதி கட்சி சார்பில் 29 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது... அதில் 13 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... இது பாஜகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.

 பரபரப்பு ட்வீட்

பரபரப்பு ட்வீட்

இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில் அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்துள்ளார்... அதில், "அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள்.. நாங்கள் சர்தார் பட்டேலை வணங்குபவர்கள்... பாகிஸ்தான் அவர்களுக்கு பிரியமானது.. ஆனால், தாய்நாட்டிற்காக நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்தான் இன்று பெரும் பரபரப்பை அங்கு கிளப்பி கொண்டிருக்கிறது.

  BJP-யின் வீடு-வீடு பிரச்சாரம்...Akhilesh ஆட்சி குண்டர்கள் சாட்சி | Oneindia Tamil
   பாகிஸ்தான் ஆதரவாளர்

  பாகிஸ்தான் ஆதரவாளர்

  சமீபகாலமாகவே, 2 விஷயங்களில் பாஜக தொடர்ந்து உறுதிப்போக்கை கையாண்டு வருகிறது.. ஒன்று, அகிலேஷ் ஆட்சியில் குண்டர்கள் நிறைந்த காணப்படுவார்கள் என்பதை அடிக்கடி விமர்சித்து கொண்டே இருக்கிறது. நேற்றுகூட அமித்ஷா அந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.. அதேபோல, பாகிஸ்தான் இந்தியாவின் அரசியல் எதிரி மட்டுமே என்று அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர்கள் அவரை "பாகிஸ்தான் ஆதரவாளர்" என்று தொடர்ந்து குற்றம் சாட்டிவருவதும் நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு அகிலேஷ் என்ன மாதிரியான பதிலடியை தரப்போகிறார் என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

  English summary
  worshippers of Jinnah, yogi adityanaths attacks akhilesh yadav: up assembly election 2022
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X