லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பளிச் அழகு.. மஞ்சள் கலர் சேலை.. கூலிங் கிளாஸுடன் கூல் நடை.. இணையத்தில் பரபரப்பாக வைரலான ரீனா

லக்னோ பெண் அதிகாரி ரீனா திவிவேதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yogeshwari Gohite | Reena Dwivedi | தேர்தல் நேரத்தில் இணையத்தை கலக்கும் இரண்டு பெண்கள்- வீடியோ

    லக்னோ: மஞ்சள் கலர் சேலை.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். கண்களில் குளிர்கண்ணாடி.. இவர் இருந்த பூத்தில் 100சதவீத வாக்குப் பதிவாம்.. இதுதான் இணையதளத்தில் வைரலான விஷயம். "முந்தானை முடிச்சு" பட ரேஞ்சுக்கு பலரும் ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டனர்... இது இங்கல்ல, உத்தரப் பிரதேசத்தில்தான். அவரது பெயர் ரீனா திவிவேதி.

    இன்டர்நெட்டை சமீப காலமாக கலக்கி வருவது ரீனா திவிவேதிதான். பாருங்க இவரை இவர்தான் இன்டர்நெட்டின் வைரல் நாயகி என்று அத்தனை பேரும் போட்டி போட்டுக் கொண்டு இவரது படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

    விஷயம் ஒன்றுமில்லை. இவர் ஒரு அரசு ஊழியர், அந்த மாநில பொதுப் பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது படம்தான் வைரலாகி விட்டது. இவர் உ.பியில் நடந்த 5வது கட்ட வாக்குப் பதிவின்போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றினார். அதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகியுள்ளது.

    மோடியிடம் மண்டியிட்டு கிடப்பதை விட கட்சி மாறுவது எவ்வளவோ மேல்.. முதல்வருக்கு ஜோதிமணி குட்டு மோடியிடம் மண்டியிட்டு கிடப்பதை விட கட்சி மாறுவது எவ்வளவோ மேல்.. முதல்வருக்கு ஜோதிமணி குட்டு

    தவறான நோக்கம்

    தவறான நோக்கம்

    கவர்ச்சிகரமான உடையுடன் கூடிய இந்த அதிகாரியைப் பாருங்க என்று இவரது படத்தை பலரும் ஷேர் செய்கின்றனர். இவர் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இதை ஷேர் செய்வது எந்த அளவுக்கு தவறான நோக்கத்தில் இவர் பார்க்கப்பட்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் ரீனா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக சந்தோஷத்தை வெளி்படுத்தியுள்ளார்.

    குழந்தைகள் உண்டு

    குழந்தைகள் உண்டு

    ரீனா இதுகுறித்துக் கூறுகையில், எனக்கு 32 வயதாகிறது. சீக்கிரமே கல்யாணமாகி விட்டது. குழந்தைகளும் உள்ளனர். நான் அரசுப் பணியாளர். பொதுப்பணித்துறையில் பணியாற்றுகிறேன். அது வழக்கமாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் எடுத்த போட்டோதான். அது வைரலாகி விட்டது ஆச்சரியமாக உள்ளது. அதேசமயம், நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது.

    சந்தோஷம்

    சந்தோஷம்

    இது போல புகைப்படம் வெளியாவது இது முதல் முறையல்ல. 2014 தேர்தலின்போதும் கூட எனது புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது போல அப்போது நான் வைரல் ஆகவில்லை. இந்த முறைதான் என்னை செலிபிரிட்டி ரேஞ்சுக்கு மாற்றி விட்டனர். நம்மால் மற்றவர்களுக்கு சந்தோஷம் என்றால் நமக்கும் சந்தோஷம்தானே என்று கூறிச் சிரிக்கிறார் ரீனா.

    9-ம் வகுப்பு

    9-ம் வகுப்பு

    ரீனாவின் மகன்தான் இந்த புகைப்படம் வைரலாவது குறித்து தனது தாயிடம் கூறி மகிழ்ச்சி தெரிவித்தானாம். அவனது பெயர் ஆதித். 9வது வகுப்பு படிக்கிறானாம். அம்மா நீங்க வைரல் ஆகிட்டீங்க என்று கூறியதைக் கேட்டதும் ரீனாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலையாம். அதை விட அது நீங்கதான்னு என்னோட நண்பர்கள் நம்ப மறுக்கிறாங்க என்று கூறி வீடியோ காலில் பேச வைத்து தனது நண்பர்களிடமும் தனது அம்மாதான் அது என்று காட்டி பெருமை கொண்டானாம் ஆதித்.

    அழகுக்கு காரணம்

    அழகுக்கு காரணம்

    நல்ல ஆரோக்கியமான சாப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனமாக இருப்பாராம் ரீனா. அதுதான் அவரது அழகுக்கு முக்கியக் காரணம் என்கிறார் ரீனா. இவரது சொந்த ஊர் தியோரியா. இங்கு கடைசிக் கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் வாக்களிப்பதற்காக தனது கணவர் சஞ்சய்யுடன் சொந்த ஊர் கிளம்பிச் செல்லவுள்ளாராம் ரீனா.

    English summary
    Viral images of Yellow Saree Lady Reena Dwivedi in A Polling Booth number 173, near Nagram in Lucknow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X