லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூகுளில் அதிகமாக தேடப்படும் முதல்வர் யார் தெரியுமா?

கூகுளில் அதிகம் தேடப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

லக்னோ: இணையத்திலேயே அதிகமாக தேடப்படும் முதலமைச்சர்,யோகி ஆதித்யநாத்தானாம். இதனை 'கூகுள்' நிறுவனமே அறிவித்துள்ளது.

உபி முதல்வரான பிறகு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். மேலும் பாஜகவில் மிக முக்கியமான தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

நெட்டிசன்கள் மீம்ஸ்

நெட்டிசன்கள் மீம்ஸ்

சமீபத்தில் அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றி அறிவிப்பு வெளியிட்டவர் யோகி. இதனால் யோகி ஆதித்யநாத்தின் போட்டோக்களை வைத்து நெட்டீசன்கள் மீம்ஸ்கள் போட்டு கலக்கினர்.

ஃபேமஸ் ஆனார்

ஃபேமஸ் ஆனார்

அதோடு உலக பிரபலங்கள் பலருக்கும் யோகி ஆதித்யநாத், பெயரினை மாற்றி வைப்பது போலும் கமெண்ட்கள் வந்து குவிய ஆரம்பித்தன. இந்த கருத்துக்களும், போட்டோக்களும் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டன. இவரது போட்டோக்களை பார்த்துதான், யார் இந்த யோகி என நாடு முழுவதிலும் தேட துவங்கி... கடைசியில் ஃபேமஸ் ஆன கூகுள் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

முதலிடத்தில் யோகி

முதலிடத்தில் யோகி

அதன்படி, அதிகமாக தேடப்படும் முதல்வராகவும் ஆகிவிட்டார் யோகி. ஒவ்வொரு வருடமும் இணையத்தில் அதிகமாக தேடப்படும் பிரபலங்கள் யார் என்பதை ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் அறிவிக்கும். அந்த பட்டியலில் இருப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன்படி இந்த வருடம் அதிகம் தேடப்படும் முதல்வர் பட்டியலில் யோகிதான் லிஸ்ட்டில் முதலில் இருக்கிறாராம்.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இதற்கான பிரசாரத்தில் முக்கிய பேச்சாளராக, யோகி ஆதித்யநாத் இடம் பெறுவார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு பின்னர்தான், உபி முதல்வர் யோகியை இணையத்தில் தேடியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என கூகுள் நிறுவனம் காரணமும் சொல்லி உள்ளது.

English summary
Yogi Adityanath is the most popular CM: Google
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X