• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செம மூவ்.. அதிருப்தியில் பெருந்தலைகள்.. நேரில் சென்று சமாதானம் பேசும் யோகி.. ஸ்கெட்ச் ஒர்க் ஆகுமா?

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆனால் தொடக்கத்திலேயே பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

மோடி வீட்டுக்கு போன யோகி ஆதித்யநாத்.. 1 மணி நேரம் அனல் பறந்த ஆலோசனை.. பர்த் டே உள்ளிட்ட சர்ச்சை ஓவர்மோடி வீட்டுக்கு போன யோகி ஆதித்யநாத்.. 1 மணி நேரம் அனல் பறந்த ஆலோசனை.. பர்த் டே உள்ளிட்ட சர்ச்சை ஓவர்

யோகிக்கு வந்த சிக்கல்

யோகிக்கு வந்த சிக்கல்

ஒரு கட்டத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற அளவுக்கு புகழப்பட்ட உத்தர பிரதேச தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது விழுந்த கறைகள்தான் முக்கியமான சிக்கல். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் எம்.பி., எம்.எல்.ஏ.களும் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்.

மோடி அதிருப்தி

மோடி அதிருப்தி

போதாக்குறைக்கு புண்ணிய நதியாம் கங்கையில் சடலங்கள் மிதந்ததால் சர்வதேச ஊடகங்களும் உ.பி.யை பற்றி பேச ஆரம்பித்தன. இதனால் மக்கள் மட்டுமின்றி பாஜக தலைமை கூட யோகி ஆதித்யநாத் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இது போதாதென்று சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அமித்ஷா, மோடியிடம் யோகி பற்றி கடுமையாக புகார்கள் அடுக்கினார்கள். யோகி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடியும் அதிருப்தியாகி விட்டார் என்று தகவல் கசிந்ததால் சில வாரத்துக்கு முன்பு அவசர, அவசரமாக டெல்லி பறந்தார் யோகி.

கொளுத்தி போட்ட நிருபர்கள்

கொளுத்தி போட்ட நிருபர்கள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகுதான் யோகிக்கு கொஞ்சம் நிமமதி வந்தது. ஆனாலும் யோகி மீது அதிருப்தி குறையாத மோடியும், அமித்ஷாவும் பிரதமர் மோடியின் நம்பிக்கை நட்சத்திரமான அரவிந்த் குமார் சர்மாவை உ.பி,. பாஜகவின் துணைத் தலைவராக நியமித்தனர். தொடர்ந்து உத்தர பிரதேச துணை முதல்வரிடம் கேசவ் பிரசாத் மவுரியாவிடம் நிருபர்கள், '' வருகிற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்று கொளுத்தி போட, ''இதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும்'' என்று கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

செம மூவ்

செம மூவ்

இதனால் உத்தர பிரதேச பாஜவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது என்று தகவல்கள் கசிந்தன. இதனால் யோகி கடும் நெருக்கடியில் சிக்கி தவித்தார். உ.பி தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தீவிரமாகும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவ்வாறு யோகிக்கு தொடர் நெருக்கடிகள் வர நேற்று ஒரு செம மூவ் எடுத்துள்ளார் யோகி.

துணை முதல்வர் வீட்டுக்கு..

துணை முதல்வர் வீட்டுக்கு..

அதாவது முதல்வர் யோகி ஆதித்யாநாத், தனது இருப்பிடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வீட்டுக்கு சென்றார். யோகியுடன் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மற்றும் செயல்பாட்டாளர்கள்கிருஷ்ண கோபால், அனில் ஆகியோர் யோகியுடன் சென்றனர். உ.பி.யின் மற்றொரு துணை முதல்வருமான தினேஷ் சர்மாவும் உடன் சென்றார்.

பல மணி நேரம் ஆலோசனை

பல மணி நேரம் ஆலோசனை

கடந்த மாதம் கேசவ் பிரசாத் மவுரியாவின் மகனுக்கு திருமணம் நடந்த நிலையில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவே யோகி, துணை முதல்வர் வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. யோகி மணமக்கள் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அங்கேயே மதிய உணவை முடித்த முதல்வர் யோகி, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பாஜக அலுவலகத்துக்கு சென்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

சமாதான முயற்சி

சமாதான முயற்சி

துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இல்லத்திற்கு யோகி சென்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தன் மீதான அதிப்ருதியை சரிக்கட்டவும், கேசவ் பிரசாத் மவுரியாவை சமாதானம் செய்யவும் யோகி அங்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. தன மீதான நெகட்டிவ் இமேஜை போக்குவதற்காகாகவே ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், மாநில மூத்த தலைவர்களுடன் யோகி சுலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் ஒற்றுமையுடன் இருந்ததால்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்று கூறி பாஜக தலைவர்களை அவர் ஐஸ் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

English summary
Yogi Adityanath meet with RSS leaders and CM Keshav Maurya. The BJP leadership was also said to be in extreme anger over Yogi Adityanath
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X