மசூதிகளின் ஒலி பெருக்கிகளை பறித்து.. பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வழங்குவோம்.. சொல்கிறார் யோகி
லக்னோ: மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகள் மருத்துவமனைகள் அல்லது பள்ளிகளுக்கு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
அவர் கூறுகையில் பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலின் போதும் சரி, தேர்தல் முடிந்த பிறகும் சரி வன்முறைகள் நடக்கவில்லை.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ராம நவமி நாள் மிகவும் தீவிரமாக கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தன. இந்த உத்தரப்பிரதேசத்தில்தான் முன்னொரு காலத்தில் சிறிய பிரச்சினைகளும் வன்முறைக்கு வழிவகுத்ததாக இருந்தன.

நமாஸ்
சாலைகளில் சப்தமாக நமாஸ் செய்யப்படாததை நீங்கள் முதல்முறையாக காண்கிறீர்கள். மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் ஒலியை குறைப்பது அல்லது அவற்றை முற்றிலும் நீக்கும் முயற்சிகளும் எடுக்கப்படும். மசூதிகளில் பொருத்தப்படாமல் உள்ள ஒலிப்பெருக்கிகள் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.

சாலைகளில் பசுக்கள்
மாநிலத்தில் சாலைகளில் சுற்றி வரும் கால்நடைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து பசு வதை கூடங்களும் மூடப்பட்டன. இதனால் சாலைகளிலும் நிலங்களிலும் கால்நடைகள் சுற்றி வருகின்றன.

கால்நடைகள்
முன்னர் இது போல் சுற்றும் கால்நடைகள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டும் கூடங்களுக்கு அனுப்பப்படும். வீதிகளில் கால்நடைகள் சுற்றுவதை தடுக்க 5600 க்கும் மேற்பட்ட கால்நடை கொட்டகைகள் அமைக்கப்படும். அது போல் மாட்டுச் சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

பாஜக ஆட்சி
இதற்காக சாணங்கள் கிலோ ஒன்றுக்கு பெறப்படும். இவையெல்லாமே பசுக்களை பாதுகாக்கவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போது அரசு ஒவ்வொரு கோயில்களை உருவாக்குகிறது. மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் உ.பி.யின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் யோகி. பல மாநிலங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக சப்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.