லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே சட்ட ஒழுங்கில் உ.பி. தான் டாப்..அதற்கு ஒரே காரணம் யோகி தான்.. பாராட்டித் தள்ளிய அமித் ஷா

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா 2ஆம் அலை இப்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொதுமக்களைக் கவரும் வகையில் பல முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

அமித் ஷா பேச்சு

அமித் ஷா பேச்சு

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ள தடய அறிவியல் நிறுவனத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "பாஜக அரசு ஏழைகளை வாழ்க்கையை மேம்படுத்தத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நான் 2019க்கு முன் பல முறை உத்தரப் பிரதேசத்திற்கு வந்துள்ளேன்.

பாதுகாப்பற்ற நிலை

பாதுகாப்பற்ற நிலை

எனவே, இங்கு முன்பு என்ன மாதிரியான நிலைமை இருந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மேற்கு உபி-இல் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலையவியது. நில மாஃபியா ஏழை மக்களின் நிலத்தை அபகரித்தனர். பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு தொடங்கி கலவரம் வரை சர்வ சாதாரணமாக நடந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியே தொடங்கியிருந்தனர்,

சட்ட ஒழுங்கு

சட்ட ஒழுங்கு

கடந்த 2017ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் ஆட்சி அமைத்த போது இந்த மாநிலத்தை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றுவோம் என்றும் சட்டம் ஒழுங்கை சீரமைப்போம் என்றும் வாக்குறுதி அளித்தோம். இன்று யோகி ஆதித்யநாத் அரசு உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர். இதை என்னால் பெருமையாகச் சொல்ல முடியும்.

பாஜக அரசு

பாஜக அரசு

பாஜக அரசு எந்த காலத்திலும் எந்தவொரு குறிப்பிட்ட சாதியினருக்கும், குடும்பத்தினருக்கும் மட்டும் சாதகமாக நடந்துகொள்ளாது. ஏழைகளின் வளர்ச்சிக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பதற்காகவுமே பா.ஜ.க அரசு செயல்படும். அதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.

பாராட்டித் தள்ளிய அமித் ஷா

பாராட்டித் தள்ளிய அமித் ஷா

இன்று, நாட்டிலேயே அதிகபட்சமாக 44 வளர்ச்சித் திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவது மிகவும் எளிது, ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதும், இடைத்தரகர்களை நீக்குவதும், உரியவர்களுக்கு முழு பலன்களை எடுத்துச் செல்வதும் மிகக் கடினம். அதையும் யோகி அரசு சிறப்பாகச் செய்கிறது" என்று பாராட்டித் தள்ளினார்..

English summary
Union Home Minister Amit Shah praised Yogi government in Uttar Pradesh for taking the state to the "top spot" in terms of law and order. Shah credited Yogi Adityanath for effectively implementing development and welfare schemes in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X