• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனாவால் வந்த பீதி.. பஸ் கிடைக்காமல் பைக்கில் போய்.. பரிதாபமாக உயிரை விட்ட 3 பேர் !

|

மதுரை: சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை... அதனால் பைக்கிலேயே ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்று சென்ற 3 பேருமே சாலை விபத்தில் படுகோரமாக உயிரிழந்துள்ளனர்.. உளுந்தூர்பேட்டை மற்றும் கரூர் அருகே இந்த கோர விபத்துகள் நடந்துள்ளன.

  மதுரையில் ஒருவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது? நீடிக்கும் மர்மம்

  நேற்று திடுதிப்பென்று 144 தடை உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டது.. இன்று மாலை முதல் தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  இதனால் வெளியூர்களில் தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் ஸ்டேண்டுகளில் குவிந்து விட்டனர்.. ஒருத்தருக்கொருத்தர் முண்டியடித்து கொண்டு பஸ்களில் ஏற முயன்றனர்.. வாய்த்தகராறு - தள்ளுமுள்ளு - கைகலப்பு என சகலமும் கூட்டத்தோடு கூட்டமாக பஸ் ஸ்டாண்ட்களில் நடந்ததை காண முடிந்தது.

  கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி

  ஆரப்பாளையம்

  ஆரப்பாளையம்

  அந்த வகையில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்காம்ளி என்பவர்.. 26 வயதாகிறது.. இவர் சென்னையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார்... சென்னையில் இவர் தங்கி உள்ளதால் பஸ்ஸில் செல்ல முயன்றும், அது முடியாமல் போனதால் பைக்கிலேயே மதுரைக்கு சென்றுவிடலாம் என முடிவு செய்தார்.. அதன்படியே இவர் கிளம்பி வந்து கொண்டிருந்தார்.

  உயிரிழந்தார்

  உயிரிழந்தார்

  உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதினார்.. பலமாக மோதி கீழே விழுந்ததில், வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல, கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேரும், எதிரே வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். ஓசூரை சேர்ந்தவர்கள் சரவணன், நாகராஜன்.. இவர்கள் பைக்கில் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

  விபத்து

  விபத்து

  கரூர் அருகே எதிரே வந்த லாரி வேகமாக இந்த பைக்கில் மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. இது எல்லாவற்றிகும் காரணம் கொரோனா பீதி காரணமாக இவர்களக்கு பஸ் கிடைக்காமல் போயுள்ளதுதான்.. அதனால்தான் பைக்கிலேயே சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர்! 144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறில்லை.. அந்த உத்தரவு இதுபோன்ற அவசர அவசிய நேரத்தில் முக்கியமானதும்கூட.

  சமூக விலகல்

  சமூக விலகல்

  ஆனால் அதே சமயம் 144 பிறப்பிப்பது என்று தெரிந்துவிட்டால், அதற்கேற்றபடி பொதுமக்களுக்கு போதுமான பஸ் வசதிகளை அரசு இயக்கியிருக்க வேண்டும்.. கூடுதலாக பஸ்களை இயக்காமல், 144 தடை என்று சொல்லிவிடவும் மக்கள் என்னதான் செய்வார்கள்? முண்டியடித்து கொண்டு ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்பார்களே தவிர சமூக விலகல் என்ற விஷயத்தை பற்றி சிந்திக்கவும் தோன்றாது.. கடைசியில் இதுபோன்ற பரிதாப மரணங்கள்தான் ஏற்படுகின்றன!

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  144 ban: road accident near madurai and karur, 3 died on the spot
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more