மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன?

3 பேரிடம் 23 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    துபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு!-வீடியோ

    மதுரை: துபாயில் இருந்து துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை ஆகிறதா என்று தெரியவில்லை.. 3 பேரிடம் இருந்து மதுரை ஏர்போர்ட்டில் 23 துப்பாக்கிகளை போலீசார் அதிரடியாக கைப்பற்றி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    துபாயில் இருந்து 2 நாளைக்கு முன்னாடி மதுரைக்கு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.

    23 Guns confiscated at Madurai Airport

    அதில் 3 பேர் மீது மட்டும் சந்தேகம் வலுவாக எழுந்தது. அதனால் அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களை சோதனை செய்தனர். அப்போது, 23 துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கி சுடும் போட்டிகளில் பயன்படுத்துவார்களே.. அதுபோன்று அந்த 23 துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால் அதற்கான முறையான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

    இதை பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, துப்பாக்கி சுடும் சங்கத்தில் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக சொன்னார்கள். இதனால் அதிகாரிகளும் இந்த 2 நாளாக அவர்கள் சொன்னதுபோலவே தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால், இந்திய துப்பாக்கி சுடும் கழகங்களில் இப்படி துப்பாக்கிகள் பதிவு செய்யப்படவில்லை என்பது உறுதியாக தெரிந்தது. இதையடுத்து, ரூ.17.01 லட்சம் மதிப்புள்ள 23 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    விக்கிரவாண்டி.. யார் இந்த முத்தமிழ்ச் செல்வன்.. அவருடைய பின்னணி என்ன?விக்கிரவாண்டி.. யார் இந்த முத்தமிழ்ச் செல்வன்.. அவருடைய பின்னணி என்ன?

    இவர்கள் யார் என தெரியவில்லை.. துப்பாக்கியை துபாயில் இருந்து ஏன் கொண்டு வர வேண்டும், தீவிரவாதிகளுக்காக துபாயில் இருந்து துப்பாக்கிகள் கடத்தப்பட்டு உள்ளனவா என்பதும் தெரியவில்லை. அதனால் இது சம்பந்தமாக போலீசார் மிக தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். எனினும் 23 துப்பாக்கிகளுடன் மதுரை ஏர்போர்ட்டில் 3 பேர் வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Officials have seized 23 guns at Madurai Airport and 3 person arrested for undocumented records
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X