• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மதுரையில் கிறிஸ்துவ காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய 67 வயது காமுகன் கைது!

Google Oneindia Tamil News

மதுரை: கிறிஸ்தவ காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை அடுத்து 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை அருகே கிறிஸ்தவ சேவா சங்கத்தின் கட்டண காப்பகத்தில் மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை ஏழு முறை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி அதனை மறைக்க உடல்நல கோளாறு என்று நாடகமாடிய கொடுமை அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கென்னட் அறக்கட்டளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகிறது.

நீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்புநீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு

21 ஆண்டுகள்

21 ஆண்டுகள்

இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக அவரது தாய்மாமன் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரர் ஆகியோர் கொண்டுவந்து சேர்த்தனர்.

மனவளர்ச்சி

மனவளர்ச்சி

தாய் தந்தை இருவரும் இறந்து போனதால் கவனிப்பின்றி தவித்த மனவளர்ச்சி குன்றிய தனது தங்கையை இந்த காப்பகத்தில் சேர்த்த சகோதரர் ஓட்டலில் வேலை பார்த்து மாதந்தோறும் ரூ 1500 கட்டணம் செலுத்தி பராமரித்து வந்தார். இவர்களுக்கு தாய்மாமன் பக்கபலமாக இருந்துள்ளார்.

பெண்

பெண்

வருடத்திற்கு இரு நாட்கள் மட்டும் அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் தாய்மாமாவை அழைத்த காப்பக நிர்வாகி இராஜசேகரன் உங்கள் பெண்ணுக்கு உடலில் ஏதோ மாற்றம் காணப்படுகிறது.

9 மாத கர்ப்பம்

9 மாத கர்ப்பம்

சாப்பிட்டால் வயிறு ஊதுகிறது. எனவே அவரை வந்து அழைத்து சென்றுவிடுங்கள் என கூறியுள்ளார். அவர்களும் முறையாக காப்பகத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் உள்ள பெண்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் அந்தப் பெண் 9 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன அந்தப் பெண்ணின் சகோதரர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காப்பகத்தில்விசாரணை மேற்கொண்டதில் பல வருடங்களாக அங்கு வேலை பார்த்து வந்த 67 வயதான ஊழியர் ஜீவநேசன் என்பவர் கருப்பு ஆடு என்பது தெரியவந்தது.

67 வயது முதியவர்

67 வயது முதியவர்

மேலும் அந்த நபர் அந்த காப்பகத்திலிருந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள என்பதும் தெரியவந்துள்ளது. அந்த 67 வயது முதியவர் பெண்ணை கவனித்துக் கொள்வதாக கூறி அந்த காப்பகத்தின் தோட்டத்து பகுதிக்கு அழைத்துச் சென்று யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி சுமார் ஏழு முறை பலாத்காரம் செய்துள்ளார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை


இதனையடுத்து அந்த காமகொடூரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காப்பக நிர்வாகிகள் 10 பேரிடமும் மற்றும் காப்பக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
67 years old man harasses 45 years old mentally disabled woman in trust in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X