மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

80 ஆண்டிற்கு பின் திறக்கப்படுகிறது.. மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாரசியம்.. மதுரை மக்கள் உற்சாகம்!

Google Oneindia Tamil News

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் மிக முக்கியமான நுழைவு வாயில் ஒன்று இன்று திறக்கப்பட உள்ளது. இது மதுரையில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகம் முழுக்க பிரபலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் வந்து செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது லாக்டவுன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மக்கள் செல்ல முடியவில்லை. கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே தினமும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

8 ஆண்டு சிறை- 3 ஆண்டு தலைமறைவு - 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணி.. ஓய்வறியா தலைவர் என். சங்கரய்யா8 ஆண்டு சிறை- 3 ஆண்டு தலைமறைவு - 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணி.. ஓய்வறியா தலைவர் என். சங்கரய்யா

வாயில் திறப்பு

வாயில் திறப்பு

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் மிக முக்கியமான நுழைவு வாயில் ஒன்று இன்று திறக்கப்பட உள்ளது. இது மதுரையில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த வாயில் மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுர நுழைவுவாயிலுக்கு அருகே இருக்கிறது. இதற்கு உள்ளே சென்று 15-20 மீட்டர் நடந்து சென்றால் இந்த நுழைவு வாயிலை அடைய முடியும்.

மூடப்பட்டது ஏன்

மூடப்பட்டது ஏன்

ஆனால் இந்த நுழைவு வாயில் இத்தனை நாட்களாக மூடப்பட்டு இருந்தது. இத்தனை நாட்கள் என்றால் மொத்தமாக கடந்த 80 வருடமாக இந்த வாயில் திறக்கப்படவே இல்லை. மக்கள் கூட்டம் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக இந்த வாயில் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது 80 வருடம் கழித்து இதை திறக்க உள்ளனர்.

இன்று திறக்கிறார்கள்

இன்று திறக்கிறார்கள்

இந்த வாயிலை இன்று திறக்க உள்ளனர். சரியான பூஜை மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளை செய்து இந்த வாயிலை திறக்க உள்ளனர். இந்த வாயில் மூலம் மிக எளிதாக, நேரடியாக கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முடியும். இதை தற்போது திறக்க உள்ளனர். இத்தனை வருடம் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்காமல் பூட்டிய வாயில் திறக்கப்பட உள்ளது .

என்ன காரணம்

என்ன காரணம்

இது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் லாக்டவுன் காரணமாக மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை இப்போது திறக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. அதேபோல் இந்த வாயில் வரும் நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

English summary
A closed door to be opened today in Madurai Meenatchi Amman temple after 80 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X