மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Neasamani: நேசமணியே.. எங்கள் பாசமணியே.. பாசத்துடன் மதுரை மைந்தர்கள் கண்டித்து ஒட்டிய போஸ்டர்

Google Oneindia Tamil News

மதுரை: உலகம் முழுவதும் டிரன்ட்டான நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து மதுரையில் போஸ்டர் ஒட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

கடந்த 30-ஆம் தேதி சிவில் என்ஜினியரிங் லேர்னர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை போட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் சொல்வார்கள் என ஒருவர் துபாயில் உள்ள விக்னேஷ் பிரபாகரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவரோ இதன் பெயர் சுத்தியல். இதுதான் பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து டங் டங் என சத்தம் கேட்டு அவரது மண்டை உடைந்தது என வடிவேல் காமெடியை கூறியுள்ளார்.

பிரபலமான ஹேஷ்டேக்

பிரபலமான ஹேஷ்டேக்

இதையடுத்து அந்த நண்பரும் நேசமணி இப்போது எப்படி உள்ளார் என கேள்வி கேட்க அதற்கு விக்னேஷ் Pray for Neasamani என கூறியதன் மூலம் உருவான ஹேஷ்டேக் பிரபலமானது.

போஸ்டர்

போஸ்டர்

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா கிடைத்தது போல் டிரம்ப்பையும் விட்டு வைக்காத அளவுக்கு மீம்ஸ்களை உருவாக்கினர். இந்த நிலையில் மதுரையில் டெம்பிள் ஆட்ஸ் நண்பர்கள் குழு சார்பில் வித்தியாசமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நேசமணிக்கே..

நேசமணிக்கே..

அதில் நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து ஜாலியான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது பாசமும் நேசமும் நேசமணிக்கே... என்ற ரைமிங்குடன் போஸ்டர் தொடங்குகிறது.

மண்ணின் மைந்தர்கள்

மண்ணின் மைந்தர்கள்

குமுறுகிறது உலகம். பாஸ் நேசமணியே எங்கள் பாசமணியே, அப்ரன்டிசுகளின் ஆதரவே எழுந்து வா, சூனா பானாவே ... உன்னை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டிக்கிறோம் என்றும் மதுரை மண்ணின் மைந்தர்கள் அவர்களது ஊர்காரரான வைகை புயல் வடிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுத்தியல் படம்

சுத்தியல் படம்

அதில் சுத்தியல் விழுந்த போது வடிவேல் கொடுத்த ரியாக்ஷனை பெரிய அளவில் போட்டுள்ளனர். சிறிய அளவில் நேசமணி, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலை மேல் சுத்தியல் படம் போட்டுள்ளனர்.

English summary
A Poster which goes viral which condemns Krishnamoorthy who puts hammer on Neasamani in Friends Movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X