மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடி அமாவாசை வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்யுங்க - முன்னோர்களின் ஆசி கிடைக்கும்

திங்கட்கிழமை வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் ஆடி அமாவாசை திங்கட்கிழமை வருவது அற்புதமானது. அம்மா இல்லாதவர்கள் திங்கட்கிழமை அம்மாவை நினைத்து தான தர்மங்கள் செய்யலாம். இந்த ஆண்டு வீட்டிலேயே தர்ப்

Google Oneindia Tamil News

மதுரை: ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலமும் அன்னதானம் செய்வதன் மூலமும் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.

ஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்கஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க

எந்த நாளில் முன்னோர்களை வணங்கலாம்

எந்த நாளில் முன்னோர்களை வணங்கலாம்

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறுநாள்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாள்களாகும்.

சூரியன் சந்திரன் அமாவாசை

சூரியன் சந்திரன் அமாவாசை

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.

சந்திரன் சந்தோஷம்

சந்திரன் சந்தோஷம்

அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். மனோகாரகன் சந்திரன் சந்தோஷமடைந்தால் நம்முடைய மனதும் சந்தோஷம் அடையும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடி வெற்றி பெறும். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

முன்னோர்களை வரவேற்போம்

முன்னோர்களை வரவேற்போம்

முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கொரோனா லாக்டவுன் உள்ள இந்த காலத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்போம்.

அன்னதானம் சிறப்பு

அன்னதானம் சிறப்பு

பித்ரு வழிபாடு முடிந்ததும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்க. நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

English summary
The new moon coming on Monday is special. That too with the Aadi amavasai coming on Monday is fantastic. Giving the prophecy at home this year Worship the ancestors and get their blessing perfectly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X