மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை

Google Oneindia Tamil News

மதுரை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

ACEO comments on Madurai issue

காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு செய்தேன். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னனு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன.

சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களிடன் விசாரணை மேற்கோண்டேன். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பேன். அதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படு.

ACEO comments on Madurai issue

வாக்குஎண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றபட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வறிக்கையை விரைவில் சமர்பிக்க உள்ளேன். வேட்பாளர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தேன்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் , அரசு ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வாக்குஎண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

English summary
ACEO Balaji has said that EC will send a report on officials entering into Madurai counting centre illegally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X