மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

மதுரை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் இப்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது.தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதனால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பிச்சாச்சு.. தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பெண்ணுக்கு கத்திக்குத்து.. சபாநாயகரின் ஒட்டுநர் கைது! ஆரம்பிச்சாச்சு.. தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பெண்ணுக்கு கத்திக்குத்து.. சபாநாயகரின் ஒட்டுநர் கைது!

ஹோட்டல்கள் மூடப்படும் அவலம்

ஹோட்டல்கள் மூடப்படும் அவலம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் மதியம் மட்டும் சாப்பாடு விற்பனையை நிறுத்தலாமா? என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. அந்த அளவிற்கு தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

ரூ.400 கோடி ஒதுக்கீடு

ரூ.400 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமக தலைவர் சரத்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் இப்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது என்றார்.மேலும், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால், யாருக்கு ஆதரவு என்பது குறித்து கருத்து கூற முடியாது. நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து என கூறினார்.

சரத்குமார் வேண்டுகோள்

சரத்குமார் வேண்டுகோள்

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமக தலைவர் சரத்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது என்றார்.மேலும், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால், யாருக்கு ஆதரவு என்பது குறித்து கருத்து கூற முடியாது. நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து என கூறினார்.

இணைந்து செயல்பட வேண்டும்

இணைந்து செயல்பட வேண்டும்

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்காது குறித்து வேதனை தெரிவித்த சரத்குமார், தண்ணீர் பிரச்சனையைப் பொருத்த வரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பின்னர், எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.

English summary
SMK party Leader Sarath Kumar request that Activate Jayalalithaa's rainwater harvesting plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X