மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரசிகர்களின் வெறித்தனம்.. "வாங்கய்யா வாத்தியாரய்யா"... மதுரையில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்!

விஜய் பிறந்த நாளுக்காக மதுரையில் ஒட்டப்பட்ட மற்றொரு போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: இதுதான் வெறித்தனம் என்பது.. "வாங்கய்யா வாத்தியாரய்யா" என்று மதுரையில் ஒட்டப்பட்ட விஜய் போஸ்டர் தமிழகம் முழுக்க அதிர வைத்து வருகிறது.. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு, போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் இதில் ஹைலைட்டே!

நடிகர் விஜய்-க்கு பிறந்த நாள் என்றாலே அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.. அதற்கான போஸ்டர்கள் 10 நாளைக்கு முன்பே களை கட்ட ஆரம்பித்துவிடும்.

அதேபோல இந்த போஸ்டர்கள் குஷியால், சந்தோஷத்துக்கு அடித்து ஒட்டப்படும் போஸ்டர்கள் போலவே இருக்காது.. ஒவ்வொரு முறையும் எதையாவது பரபரப்பை தந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கே ஒரு ஜெர்க் தந்துவிடுவார்கள். இதில் டாப் லிஸ்ட்டில் உள்ளது மதுரைதான்!

சபாஷ்..! சென்னையில் காக்கா, குருவிகூட வெளியே வரவில்லை.. டாக்டர் ராமதாஸுக்கு செம ஹேப்பி!சபாஷ்..! சென்னையில் காக்கா, குருவிகூட வெளியே வரவில்லை.. டாக்டர் ராமதாஸுக்கு செம ஹேப்பி!

 பிறந்த நாள்

பிறந்த நாள்

2018-ல் மதுரையில் விஜய் பிறந்த நாளையொட்டி ஒரு போஸ்டரில், ''ஜூன் 22-ல் முடிவு எடுக்கிறார் விஜய். தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் விஜய்'' என்று ஒரு தலைப்பை போட்டு அதற்கு கீழே ''தமிழக மக்கள் மகிழ்ச்சி, என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

 சிவாஜி, கமல்

சிவாஜி, கமல்

சில தினங்களுக்கு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரில், சிவாஜி, கமல், போட்டோவுக்கு பக்கத்தில் விஜய் படம் உள்ளது.. கமலுக்கு அடுத்தப்படியாக திரையுலகின் மூன்றாவது தமிழ் வாரிசு என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் "தமிழகத்தை காக்க வரும் தன்னலமற்ற தலைவன், மக்கள் தலைவன் நாளைய முதல்வன் " என்றும் வழக்கம்போல் புகழ்ந்து வரிகள் உள்ளன... கமலுக்கு அடுத்தபடியாக விஜய் இருக்கிறார், அதாவது ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரையே இதில் காணோம்.

 ஜெகன்மோகன்

ஜெகன்மோகன்

தற்போது, இன்னொரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. "வாங்கய்யா வாத்தியாரய்யா" என்பது அந்த போஸ்டரின் தலைப்பு.. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய் இருப்பது போன்ற போட்டோவை டாப்-பில் வைத்துள்ளனர்.. மேலும் அந்த போஸ்டரில் அச்சிட்டுள்ளதாவது:

கேரளா

கேரளா

"கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா" என்று குறிப்பிட்டுள்ளனர்.

வாத்தியார்

வாத்தியார்

"வாத்தியார்" என்று எதற்காக குறிப்பிட்டுள்ளனர் என்று தெரியவில்லை.. வாத்தியார் என்றாலே நமக்கு தெரிந்தது எம்ஜிஆர்தான்.. ஒருவேளை அவரைபோல அரசியல் பிரவேசம் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்களா? அல்லது "மாஸ்டர்" படத்தில் காலேஜ் புரொபசராக நடிப்பதால் அந்த வார்த்தையை சொல்கிறார்களா என தெரியவில்லை.

 விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

"வருங்கால தமிழகத்தின் ஜெகன் மோகனாரே" என போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது.. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என தெரியவில்லை.. விஜய் மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.. பேரிடர்களின்போதும் சரி, தண்ணீர் பஞ்சம் போன்ற நெருக்கடிகள் வந்தாலும் சரி, மக்களுக்காக நின்று முடிந்தவரை உதவி வருகிறார்கள்..

சீர்திருத்தம்

சீர்திருத்தம்

அதேசமயம், விஜய்யின் அரசியல் வருகையையும் இவர்கள் எதிர்பார்த்தபடியே உள்ளனர். அந்த வகையில் எப்படியும் அரசியலுக்கு விஜய் வந்துவிடுவார் என்றும் அளவுக்கு அதிகமாக நம்பி உள்ளனர். இப்போதைக்கு நாட்டில் உள்ள இளம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான்.. பல்வேறு சீர்திருத்தங்களை செய்து ஆந்திராவையே கலக்கி வருகிறார்.

திட்டங்கள்

திட்டங்கள்

பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் இவரது சில திட்டங்களும், அறிவிப்புகளும் முன்மாதிரியாகவும் உள்ளன. அந்த வகையில் ஜெகன்மோகனை விஜய்யுடன் ஒப்பிட்டு உள்ளதாக தெரிகிறது.. மேலும் ஜெகன்மோகனும் விஜய்யும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதாலோ அல்லது ஜெகன்மோகன் போலவே விஜய்யும் செயல்படுவார் என்ற நம்பிக்கையிலுமே இப்படி ஒட்டியிருப்பதாக கருதப்படுகிறது.

தலைவன்

தலைவன்

ஒரு நடிகருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தாண்டி, ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்களாகிய அந்த தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதும் இந்த போஸ்டர்கள் நமக்கு உணர்த்துகிறது!

English summary
actor vijay birthday posters in madurai and goes viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X