• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்... மதுரை வீதிகளில் பளீச்

|
  Bigil Vijay fans : அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்-வீடியோ

  மதுரை: நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. பிகில் திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

  பிகில் திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் பெயர் கேப்டன் மைக்கேல். அதனை சுருக்கமாக சி.எம்.(CM) என விஜயைக் குறிப்பிட்டு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே ஆளுங்கட்சிக்கும், விஜய்க்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த போஸ்டர் அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

  தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!

  விநோத போஸ்டர்

  விநோத போஸ்டர்

  மதுரைக்கும் போஸ்டருக்கும் என்ன தான் தொடர்போ தெரியவில்லை, அவ்வப்போது மதுரையில் மட்டும் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. குறிப்பாக அந்த போஸ்டர்களில் அச்சிடப்படும் வாசகங்கள் வீரியமான வார்த்தைகளாக உள்ளன.

  பாரபட்சமின்றி

  பாரபட்சமின்றி

  திமுக, அதிமுக, என அனைத்துக்கட்சியினரும் மதுரையில் எந்த போஸ்டர் ஒட்டினாலும், அது அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளை கூறலாம். மதுரை அதிமுக பிரமுகர் கிரம்மர் சுரேஷ் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அடித்த போஸ்டர் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. ''காவிரியை வச்சுக்க அம்மாவை கொடு'' என குழந்தை அழும் படத்தை போட்டு அசத்தினார். இதற்கு சற்றும் குறைவில்லாமல் மு.க.அழகிரி ஆதரவாளர்களும், தங்கள் பங்குக்கு ஸ்டாலினை சீண்டும் வகையில் போஸ்டர் ஒட்டுவார்கள்.

  சிக்கல்

  சிக்கல்

  நடிகர் விஜய் படங்களான தலைவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களும் திரைக்கு வர பல சவால்களை சந்தித்தன. தலைவா படத்தின் போஸ்டர்களில் டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்ட பின்னரே அது சிக்கலின்றி வெளியானது. இதேபோல் சர்க்கார் படமும் திரைக்கு வர திணறியது. எப்படியோ அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடவடிக்கைகளால் சர்க்கார் வெற்றிகரமாக திரையில் ஓடியது.

  சமாதானம்

  சமாதானம்

  இந்நிலையில் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே வைக்க வேண்டும் என விஜய் பேசியது அனைவரும் அறிந்தது. இதை தமிழக ஆட்சியாளர்களை மனதில் வைத்து விஜய் பேசினார் என ஒரு சிலர் கூறினாலும், விஜயின் தந்தை அதனை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு எதிரியல்ல என்றும், யாரையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை எனவும் சமாதான படலத்தை மேற்கொண்டுள்ளார்.

  சி.எம்.போஸ்டர்

  சி.எம்.போஸ்டர்

  மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கபாண்டியன் ஒட்டியுள்ள போஸ்டரில் ''சி.எம். ஆஃப் தமிழ்நாடு'' என்ற வாசகத்தை அச்சடித்து அதில் விஜய் படமும் போடப்பட்டுள்ளது. இதனிடையே பிகில் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் கேப்டன் மைக்கேல் அதனை சுருக்கி சி.எம்.என போட்டதாக விஜய் ரசிகர் மன்றத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

   
   
   
  English summary
  Actor Vijay fans paste controversy posters in madurai
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X