• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ம்ஹூம்.. அவர் "அதுக்கு" சரிப்பட்டு வரமாட்டார்".. பஸ் ஸ்டாண்டை அதிர வைத்த விந்தியா.. மிரண்ட மதுரை

Google Oneindia Tamil News

மதுரை: "ராகுல் காந்தியும், உதயநிதியும் ஜல்லிக்கட்டு போய் பார்த்திருக்காங்க.. இதில் ஒருத்தருக்கு பிரதமர் கனவு.. இன்னொருத்தருக்கு முதல்வர் கனவு.. ஆனால், அதுக்கு இவங்க 2 பேரும் சரிப்பட்டு வர மாட்டாங்க... அன்னைக்கு ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்துவிட்டு, இப்போ ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருக்காங்க.." என்று நடிகை விந்தியாவின் பிரச்சாரம் மதுரையை கலக்கி கொண்டிருக்கிறது.

  திண்டுக்கல்: தி.மு.க., டி.டி.வி.யை துரத்தியடிக்க வேண்டும்: இருவரும் துரோகிகள் - விந்தியா!

  மறைந்த ஜெயலலிதா மீது அளவுக்கு அதிகமான பிரியத்தையும் மரியாதையையும் வைத்திருந்தவர் நடிகை விந்தியா..

  ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று விடாமல் சொல்லி கொண்டே இருப்பார்.பெரும்பாலானோர் நட்சத்திர பேச்சாளர்களாகவே இருந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு சீட் கிடைப்பது என்பது அரிதான காரியம்..

  விசுவாசி

  விசுவாசி

  ஜெயலலிதா இறந்த பிறகு, எத்தனையோ பேர் கட்சியில் இருந்து பிரிந்து போய்விட்டனர்.. பலர் கட்சி மாறிவிட்டனர்.. தாவி விட்டனர்.. ஆனால் விந்தியா, இப்போதும் அதிமுகவில் நீடிக்கிறார்.. அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற பொறுப்பிலிருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்று உயர்ந்துள்ளார்.. எப்போது பிரச்சாரம் என்றாலும், முதல் நபராக களம் இறங்கியும் விடுகிறார்.

  மதுரை

  மதுரை

  ஆரம்பத்தில் தட்டு தடுமாறிதான் தமிழில் பேசினார்.. தெலுங்கு வாடை அதிகமாக அடித்தாலும், விந்தியா பேச்சை அதிமுக தொண்டர்கள் ரசித்தபடியே உள்ளனர். இந்த முறையும் விந்தியாவின் பேச்சு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் ஆர்பி. உதயகுமாரை ஆதரித்து விந்தியா பேசியது பெரும் திகைப்பை தந்து வருகிறது.

  ராகுல்

  ராகுல்

  பொதுவா ஜல்லிக்கட்டு என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்.. ஏன்னா, திமுக மாதிரி அங்கே பூம்பூம்மாடு எல்லாம் கிடையாது. அங்க வருவது எல்லாம் கொம்பு வைத்த சிங்கம்.. அதனால், அதை அடக்குவது தனி அழகுதான். அப்படி ஒருநாள் ஜல்லிக்கட்டு பார்க்கலாம்னு டிவி போட்டேன்.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா போச்சு.. ஏன்னா, ஜல்லிக்கட்டு பார்க்க 2 பேர் வந்திருந்தாங்க.. ஒன்னு, விவரம் கெட்ட ராகுல்காந்தி, இன்னொன்னு விவஸ்தை கெட்ட உதயநிதி.. 2 பேருமே வேடிக்கை பார்க்க வந்தனர்.

   முதல்வர் கனவு

  முதல்வர் கனவு

  இதில் ஒருத்தருக்கு பிரதமர் கனவு.. இன்னொருத்தருக்கு முதல்வர் கனவு.. ஆனால், அதுக்கு இவங்க 2 பேரும் சரிப்பட்டு வர மாட்டாங்க... அன்னைக்கு ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்துவிட்டு, இப்போ ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருக்காங்க.. ஸ்டாலின் டிசைன் டிசைனாக விளம்பரம் தருவார்.. நமக்கு நாமே, வருங்கால முதல்வரே இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டி பொழப்பை ஓட்டினார்... இப்போ கிராமசபை கூட்டம் கூட்டினார்.. ஆனால் அந்த கூட்டத்துக்கு போனவங்க எல்லாரும், என் மாட்டை காணோம், என் புருஷனை காணோம்ன்னு புகார் சொல்றாங்க.

   கல்லாப்பெட்டி

  கல்லாப்பெட்டி

  அப்பறம் "விடியலை நோக்கி"ன்னு ஒரு போர்டு வைச்சார்.. திமுகவினர் பிரச்சனை பண்ணி கல்லாபெட்டி தூக்கிட்டு போவாங்க.. திமுக போகாத ஒரே கடை "சாக்கடை" தான்.. தேர்தல் வந்தால் போதும்.. கிளம்பி வந்துடறார்.. இருக்கிற எல்லா கெட்டப்பும் போட்டுவிடுவார்.. பாட்டாளி வேஷம், பங்காளி வேஷம், திடீர்னு டிராக்டர் கூட ஓட்டுவார்.. வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்வாங்க.. ஆனால், சொன்னதை எல்லாம் செய்ய மாட்டாங்க.

   கருணாநிதி

  கருணாநிதி

  அதிமுகவோ, சொன்னதை எல்லாம் செய்யும்.. அதுக்கு மேலயும் செய்யும்.. வெறும் வாயை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி.. 2 விரலை மட்டும் காட்டி மக்களுக்கு நன்மை செய்தவர் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி... திமுக மக்களுக்கு சொன்ன சோதனைகளை மட்டும் சொல்லி ஓட்டு கேட்க மாட்டோம். அம்மா ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் ஓட்டு கேட்போம்.

   வரலாறு

  வரலாறு

  இதோ, அமைச்சர் ஆர்பி உதயகுமார் மாதிரி ஒரு ஆளை திமுகவில் காட்டுங்களேன் பார்க்கலாம்.. பிணம் தின்னி கழுகு போல் காத்திருக்கும் கூட்டம் அது.. அம்மாவின் வரலாற்றையே களங்கப்படுத்த காத்திருக்கிறது. திமுகவிற்கு ஓட்டு போடும் முன் ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க.. உயிரை விட்ட அம்மாவை ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க.. எப்ப தேர்தல் வந்தாலும், "இது கடைசி தேர்தல்" என்று சொல்லி சொல்லி ஏமாற்றிய கருணாநிதியின் திமுகவிற்கு இந்த தேர்தலில் கடைசி தேர்தல் என்று நீங்க சொல்லியே ஆக வேண்டும் என்றார் விந்தியா.

  English summary
  Actress Vindhya slams DMK Leader MK Stalin and Udhayanidhi in Madurai Campaign
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X